காயல்பட்டினம் அருகே கச்சினாவிலையில் உள்ள பள்ளிக்கூடத்தை சார்ந்த பெண்கள் காப்பகத்தில் இருந்து சுமார் 30 மாணவிகள் நேற்று (ஜனவரி 7) மாலை - காயல்பட்டினம் கடற்கரை வந்திருந்தனர்.





அக்காப்பகத்தில் உள்ள இவ்வனாதை மாணவியரை - இங்கிலாந்து நாட்டை சார்ந்த சமூக சேவகர் தம்பதியர் இருவர், காயல்பட்டினம் கடற்கரைக்கு அழைத்து வந்திருந்தனர். இவர்களுடன் - வாவு வாஜீஹா வனிதையர் கல்லூரியில் நிர்வாக அலுவலராக பணியில் இருக்கும்போது விபத்தில் மறைந்த பேராசிரயர் ஹம்சாவின் கல்லூரி நண்பரான, நாசரத் புனித லூகாஸ் சமுதாய கல்லூரியின் இயக்குனர் பி. ஜெயச்சந்திரன் வந்திருந்தார்.





காயல்பட்டினம் கடற்கரையில் பல மணி நேரம் இருந்த இவர்கள் - காயல்பட்டினம் கறிக்கஞ்சி ("காரமான ஓட்ஸ்") மற்றும் மஞ்ச வாடா உட்கொள்ள மறக்கவில்லை. கடற்கரையில் உள்ளூர் மக்களை சந்தித்த அவர்கள், காயல்பட்டினம் கடற்கரை வெகுவாக தங்களை கவர்ந்ததாக தெரிவித்தனர்.




புகைப்படங்கள் மற்றும் தகவல்:
ஹிஜாஸ் மைந்தன்,
செய்தியாளர், காயல்பட்டணம்.காம். |