அர்த்தமற்ற ஆதங்கம்! posted bySalai S Nawas (Kayalpatnam)[07 January 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32316
நமதூரின் உட்தெருகலான அப்பாபள்ளி, ஆசாத் தெருக்கெல்லாம் 45 CM தோண்டி ரோடு போடுவார்களாம்.!!! நகரின் முக்கியமான பெரிய நெசவு தெருக்கு 20 CM தான் தோண்டி ரோடு போடுவார்களாம்.!!! இது எந்த விதத்தில் நியாயம் ?? (C&P)
===============================================
சாலைகள் பல காரணங்களுக்கு தோண்டி போடப்படுகிறது. ஏற்கனவே பலமுறை போடப்பட்ட சாலைகள், மீண்டும் போடப்படும்போது, தோண்டி போடப்படாததால், சாலையின் உயரம் அதிகமாகும். அதற்காக தோண்டுவார்கள் என்று அறிகிறேன்.
சாலை அமைப்பதில் ரோட்டைத் தோண்டுவது ஓர் அம்சம்தான். எனினும், தோண்டிய பாதையில் அடுக்குகளில் வரும் பொருட்களில் தன்மையே முக்கியம். சாலையை 45 சென்டி மீட்டருக்கு தோண்டி, அதன்பிறகு வரும் அடுக்கு 27.5 சென்டி மீட்டர்தான் என்றால் மழைக்காலங்களில் அங்கு தண்ணீர் தேங்காதா?
காயல்பட்டினத்தில் தோண்டி போடப்பட்ட / வேண்டிய மூன்று சாலைகளான அப்பாபள்ளி, ஆசாத், நெய்னார் தெருக்களுக்கான அடுக்குகளில் இடம்பெறும் பொருட்கள் அந்த சாலையின் போக்குவரத்தின் அளவைப் பொருத்தது. நாம் அறிந்த வரையில், அதிக போக்குவரத்து சாலைகளுக்கு தேவையான பொருட்கள் கொண்டு, ஒரு வழிப் பாதை அமைக்கப்படுகிறது.
எனவே - அந்த 3 சாலைகள் தோண்டப்பட்ட / வேண்டிய அளவையும், நிரப்பவேண்டிய பொருளையும், ஒரு வழிப்பாதையுடன் நேரடியாக ஒப்பிடுவது முற்றிலும் பொருத்தம் அல்ல.
மற்ற சாலைகளில் தோண்டப்பட்ட 45 செ.மீ. அளவுக்கு அடுக்குகளாக பொருட்கள் போடப்படுகிறது. இந்தச் சாலையில் தோண்டப்பட்ட 20 செ.மீ. அளவுக்கு பொருட்கள் போடப்படுகிறது.
இது இவர்களுக்கு புதிது அல்ல.. ஏற்கனவே 26.12.2011 அன்று அதாவது கடைசியாக எங்கள் தெருவிற்கு வந்த நகர்மன்ற தலைவி அவர்கள் பல வாக்குறுதிகளை கொடுத்தார்கள். இரண்டு வருடம் முடிந்தும் எதுவுமே செய்யவில்லை. (C&P)
சகோதரர் அஹ்மத் முஹ்யித்தீன் அவர்களே! இந்த ஆதங்கம் நியாயமானதுதானா என சற்று திறந்த மனதுடன் சிந்தனையில் கொள்ளுங்கள்!
தலைவி அப்போது பெரிய நெசவு தெருவுக்கு வந்தது - தெரு மக்களை ஒரு வழிப்பாதையை ஏற்று கொள்ள பணிவாக விண்ணப்பித்தார்கள். அந்த வேளையிலோ அல்லது அதற்கு பிறகோ, தெரு மக்களோ அல்லது அவர்களின் பிரதிநிதிகளோ, ஒரு வழிப்பாதையை ஏற்றுக்கொண்டாதாகக் கூறியிருந்தால், தலைவி கொடுத்த வாக்கை தவறிவிட்டார்கள் என்று நீங்கள் கூறுவதில் நியாயம் உள்ளது.
ஆனால்,
(மாற்று வழியில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஆக்கிரமித்துள்ளார்...
வேறு வழி உள்ளது...
எங்கள் சாலை குறுகியது...
ஒப்பந்தபுள்ளிகள் முறையல்ல...
இரண்டாம் குடிநீர் திட்டத்திற்கு பைப்...)
என, ஒருவழிப்பாதைக்கு எதிராக இன்றளவும் பல்வேறு விதமான எதிர்ப்புகள் தெரு மக்கள் சார்பாக வைக்கப்பட்டு வரும்போது,
தலைவியோ, நகர்மன்றமோ கொடுத்த வாக்குறுதியை மீறியதாக தாங்கள் கூறுவது சரியில்லையே?
என் பாணியில் சொல்வதானால், “அழுவதே! பண்டம் தாரேன்”ன்னு குழந்தைக்கு சொல்லியிருக்க, அழுதுகொண்டே “பண்டம் தாம்மா”ன்னு குழந்தை கேட்பது போல இல்லையா?
===========================================
"மின் வினியோகக் கம்பிகளை தேவையான அளவுக்கு உயரப்படுத்தி, பாதுகாப்பான வகையில் அமைப்பதாக காயல்பட்டினம் மின்வாரிய துணைப் பொறியாளர் தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும், பள்ளி மாணவர்கள் பாதுகாப்பைப் பொருத்த வரை, பள்ளி துவங்கும் நேரம், இடைவேளை நேரம்,
முடியும் நேரங்களில்தான் இப்பிரச்சினை ஏற்படும் என்றும், அதனை சரிசெய்ய, பள்ளியின் என்.எஸ்.எஸ். மாணவர்களைக் கொண்டு தினமும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதாக எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும்,
இப்பகுதியைச் சார்ந்த குழந்தைகள் விளையாடுவதற்கு நகராட்சிக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்து பேசி, தனியொரு பூங்கா அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை பாதுகாப்பான வகையில் செய்து தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா
மேலும் தெரிவித்தார். “(http://www.kayalpatnam.com/shownews.asp?id=7776) (C&P)
===============================================
(1) இரண்டு ஆண்டுகளாக ஒரு வழிப்பாதை இயங்கிவருகிறது. பேருந்துகளும் சென்று வந்தன. இறைவனின் உதவியால் மின்கம்பங்களைக் கொண்டு எந்தப் பிரச்சனையும் இல்லை. போக்குவரத்து துவங்கிய பின் ஆபத்து உள்ளது என்றும் நீங்கள் நினைத்திருந்தால், உங்கள் வார்டு உறுப்பினரிடமோ,
அலுவலர்களிடமோ, தலைவியிடமோ தெரிவித்திருக்க வேண்டுமே...? செய்தீர்களா??
(2) ஒரு வழிப்பாதையில் பள்ளிக்கூடம் விடப்படும் நேரத்தில் - இடைவேளை நேரத்தில், ஆசிரியர்கள் பாதுகாப்பாக பிள்ளைகளை வெளியில் அனுப்பவதை நாம் இன்றும் காண முடிகிறது. அதில் உங்களுக்கு திருப்தியில்லை என்றால், பள்ளிக்கூட நிர்வாகத்திற்குத் தெரிவிக்க வேண்டுமே...? செய்தீர்களா??
(3) தலைவியின் பூங்கா வாக்குறுதி - ஒரு வழிப்பாதை, உறுதியாகிவிட்டால் என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும். ஒரு வழிப்பாதையை ஏற்றுக்கொண்டதால், இந்த பகுதி குழந்தைகள் விளையாட இடம் இல்லாமல் போவதால், அதற்கு பகரமாக பொது இடம் ஒன்றில் - பூங்கா அமைக்க தடை ஏதும் இருக்காது. ஆனால் இன்று வரை - ஏதாவது ஒரு வழியில் இப்பாதை தொடர எதிர்ப்பு தெரிவித்து விட்டு, பூங்கா வாக்குறுதி நிறைவேற்றவில்லை என கூறுவது அர்த்தமற்றது. ஒரு வழிப்பாதை அமைய இனி எங்களிடம் இருந்து எந்த ஆட்சேபனையும் இல்லை என்ற நிலை வந்த பிறகு, பகுதி உறுப்பினர் மூலமோ, தலைவர் மூலமோ, தீர்மானம் கொண்டுவர முயற்சி செய்வதே நியாயம்.
இக்கருத்து, உங்கள் கருத்தைப் பார்த்ததன் அடிப்படையில் என் மனதில் தோன்றியதால் பதிவு செய்துள்ளேனே தவிர, எனக்கு எல்லா பகுதி மக்களும் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross