Tamilnadu election 2011 posted byKulam Ahmed Mohideen (Jeddah)[13 March 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3234
முஸ்லிம் லீக் Cong-Dmk கூட்டணி உடையாமல் இருக்க முயற்சி செய்து தானாகவே தான் ஒரு சீட் விட்டு கொடுத்தது. இதை கொச்சை படுத்தாமல் நமக்கு கிடைக்கும் நன்மைகளை யோசித்து பாருங்கள்
கலைஞர் முஸ்லிம்களுக்கு செய்த நன்மைகள்
திமுக ஆட்சியில் தான் முஸ்லிம் ஐ ஏ எஸ் மற்றும் ஐ பி எஸ் அதிகாரிகள் மிக உயர் பதவிகளான உள்துறை செயலாளர், முதல்வரின் முதன்மை செயலாளர் மற்றும் உளவுத்துறை ஐ ஜி போன்ற பதவிகளுக்கு நியமிக்கபட்டர்கள். தென்காசியில் கோத்ரா மாதிரியான கலவரத்தை ஏற்படுத்த RSS காரர்கள் முயன்றதை முளையிலேய கண்டுபிடித்து இந்து முஸ்லிம் கலவரத்தை தடுத்தவர் உளவுத்துறை ஐஜி ஜாபர் சேட்.
இடஒதுக்கீடு மூலம் நம் மக்கள் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் கிடைக்க வழி செய்தது முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி வழங் குவது குறித்து பரிசீலித்து மீண்டும் இந்த ஆட்சி அமைந்தால் தர வாய்ப்புள்ளது.
வக்ப் வாரியம் முயற்சியில் இஸ்லாமியர்க்கு பயன் அளிக்கும் வகையில் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி அமைக்க உத்தர விட்டவர் தமிழக முதல்வர்.
இரு வாரம் முன்பு கூட நம் சகோதரர்கள் 109 ஏழை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு, தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம் பாட்டு கழகத்தின் சார்பில் ஆட்டோக்கள் வழங்கப்பட்டது .
சமச்சீர் கல்வி திட்டத் தில் உருது மற்றும் அரபி மொழிகளை பாடமாக இணைக்க ஆணை பிறப் பித்தவர் தமிழக முதல்வர். பள்ளிவாசல்களில் பணி புரியும் உலமாக்கள் மற் றும் பணியாளர்களுக்கு இரு சக்கர வாகனம் (மிதி வண்டி) வழங்க உத்தர விட்டவர் தமிழக முதல்வர்.
கலைஞர்தான், மதமாற்ற தடை சட்டத்தை சட்டமன்றத்தை கூட்டி தீர்மானமாக கொண்டுவந்து முறையாக ரத்து செய்து உத்தரவிட்டார்.
தமிழகத்தில் இருந்து எந்த வருடமும் இல்லாத அளவில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பை பெற்றுத் தந்தவர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர்.
நம் சமுதாயம் உள்பட அனைத்து சமுதாயம் பயன் படும் வகையில் மருத்துவ திட்டம், ஆம்புலன்ஸ் திட்டம். ஒரு ரூபா அரிசி, வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம், எல்லாத்துக்கும் மேல் மதசாற்பட்ட தன்மை.
இது போல் ஐந்து வருடத்தில் நிறைய சொல்ல முடியும்.
சமுதாயம் ஒரு சீட் இழந்தாலும், அதற்கு பரிகாரமாக நிச்சயம் சமுதாயத்துக்கு காலம் காலமாக பயன் அளிக்கும் நல்ல திட்டங்கள் கிடைக்க கலைஞர் வாக்குறுதி அளித்திருப்பார்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross