செய்தி: இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது! மகளிர் பிரிவு துவக்குவது உட்பட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byசாளை S.I. ஜியாவுத்தீன் (அல்கோபார்)[11 January 2014] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32397
நடைபெற்று முடிந்த இக்ராஃ உடைய செயற்குழு கூட்டத்திற்கு பாராட்டுக்கள்.
ஊருக்கு விடுமுறையில் ஓய்வு எடுக்க வந்தாலும், தங்களால் முடிந்த அளவு பொதுக்காரியங்களில் ஈடு பட்டுவரும் சகோதரர்களுக்கும், ஊரில் பொதுக்காரியங்களுக்கே தங்களை அர்பணித்துள்ள சகோதரர்களுக்கும் எங்களின் நன்றிகள். வல்ல இறைவன் உங்களின் நற்காரியங்களை அங்கீகரிப்பானாக.
முதலில், இந்த ஒருங்கிணைந்த கல்வி சங்கமான இக்ராஃவினால் ஏழை மக்களுக்கு "சந்தோசமா" அல்லது "சங்கடமா" என்றால், அதற்க்கு ஒரு பெரிய கேள்விக்குறிதான் விடையாக வருகின்றன.
பலருடைய ஆதங்கம்தான் இது. இக்ராஃ ஆரம்பிப்பதற்கு முன்பு. ஒரு ஏழை மாணவனுக்கு, நல்ல கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கும், அவருக்கு குறைந்தது 50 ஆயிரம் தேவைப்படும். உடனே உலகில் உள்ள பல மன்றங்களுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்புவார்கள். ஒவ்வொரு மன்றமும் அவர்களால் இயன்ற அளவு உதவிகளை அனுப்புவார்கள். இந்த உதவியும் பூர்த்தி ஆகவில்லை என்றால், ஊரில் உள்ள நிறுவனங்களையும், உதவி செய்யக்கூடிய குடும்பங்களையும் அணுகி அவர்களின் தேவையான 50 ஆயிரத்தை ( கூடுதல்/குறையாகவோ) திரட்டிக்கொள்ளுவார்கள். இப்படி பல கதவுகள் அவர்களுக்காக திறந்து இருந்தது.
நாம் ஒருங்கிணைந்த உதவி, ஒருங்கிணைந்த உதவி என்று எல்லாக் கதவையும் அடைத்து, இக்ராஃ என்ற ஒரு கதவை மற்றும் திறந்து வைத்துள்ளோம். இக்ராஃ -வினால், கல்வித்தேவைகளை பூர்த்தி பண்ண முடிகின்றதா என்றால் இல்லை.
இக்ராஃ வினால் ஒரு மாணவனுக்கு வருடத்திற்கு 5 ஆயிரம் மட்டுமே கொடுக்க முடிகின்றது (அவருக்கு வருட படிப்பு செலவு மட்டுமே 80ஆயிரம் தேவை என்று வைத்துக்கொள்ளுவோம்). இந்த ஐந்து ஆயிரம், மாணவனின் போக்குவரத்து செலவிற்க்கே பத்தாது.
மற்ற மன்றங்களுக்கோ, நிறுவனங்களுக்கோ கோரிக்கை மனுக்களை அனுப்பினால், அவர்கள் உடனே இக்ராஃ-வை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி விடுகின்றார்கள். இக்ராஃ கொடுக்கும் 5 ஆயிரம் இவர்களுக்கு சந்தோசமா அல்லது சங்கடமா?
முதலில், நிதி ஆதாரங்களை அதிகரித்து, முழுமையான உதவிகளை கொடுக்கும் சங்கமாக, ஏழை மக்களுக்கு சந்தோசத்தை அளிக்கும் நிறுவனமாக நம் இக்ராஃ வை கொண்டுவரனும் என்பது தான் அனைவர்களின் ஆசை. முதலில் அதற்க்கான திட்டத்தை தயாரிக்கனும். வல்ல ரஹ்மான் அதற்க்கு உறுதுணை புரிவானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross