செய்தி: ஊண்டி ஆலிம் காலமானார்! ஜன. 11 காலை 11.30 மணிக்கு சிறுநெய்னார் பள்ளியில் நல்லடக்கம்!! திரளானோர் பங்கேற்பு!!! (திருத்தப்பட்ட செய்தி!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தெளிவானவர்... posted byS.K.Salih (Kayalpatnam)[11 January 2014] IP: 61.*.*.* India | Comment Reference Number: 32409
கண்ணியத்திற்குரிய ஊண்டி ஆலிம் அவர்களின் மறைவுச் செய்தி என்னை மிகவும் வருத்தியது.
ஒரு கருத்தை தன் வாயிலிருந்து உதிர்ப்பதற்கு முன் தீவிர ஆய்வு செய்யும் இந்த அறிஞர் பெருந்தகை, அதில் தெளிவு கிடைத்துவிட்டால் - இடம், பொருள், ஏவல் பாராமல் தெளிவாக அதனை தன் எளிய - வலிய சொற்களால் வெளிப்படுத்துவார்கள். பின் விளைவுகளைப் பற்றி கருத்திலேயே கொள்ள மாட்டார்கள்.
ஆன்மிகத்தில் வலிமையான கருத்தை தன்னகத்தே வைத்திருந்தபோதிலும், பொதுவாழ்வில் அதை சிறிதும் கலக்காதவர்கள் - கலக்கத் தெரியாதவர்கள்.
காயல்பட்டினத்தின் தற்போதைய நகர்மன்றத் தலைவர் பதவியேற்பு விழாவின்போது, அந்த விழாவிற்கே ஒரு சாயலை உருவாக்க திட்டமிடப்பட்ட நேரத்தில், அக்கறையுடன் கூடிய தனது வருகையால் அத்திட்டத்தைத் தவிடுபொடியாக்கிய இந்த ஆலிமின் செய்கையை, வாய்ப்புக் கிடைக்கும் இடங்களிலெல்லாம் நான் சொல்லத் தவறியதேயில்லை.
ஒளிவு - மறைவற்ற இவர்களது உரைகளை இனி நம்மால் கேட்க இயலாது.
கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்கள் அறிந்தோ - அறியாமலோ செய்த பிழைகளைப் பொருத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார், ஸித்தீக்கீன், ஷுஹதா, ஸாலிஹீனுடன் அவர்களையும், நம்மையும் சேர்த்தருள்வானாக, ஆமீன்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.
அனைவருக்கும் எனதன்பான அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross