காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சார்ந்த மவ்லவீ ஊண்டி எம்.எம்.செய்யித் முஹம்மத் பாக்கவீ ஸூஃபீ ஃகலீஃபத்துல் காதிரீ – ஜனவரி 10ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74.
குடும்பம்:
அன்னார், மர்ஹூம் மொகுதூம் முஹம்மத் என்பவரின் மகனும்,
மர்ஹூம் சி.ஏ.கே.ஷெய்க் அப்துல் காதிர் ஆலிம் என்ற ஸூஃபீ ஹஸ்ரத் சித்தீக்கில் காதிரில் காஹிரீ அவர்களின் மருமகனும்,
மர்ஹூம் ஊண்டி அப்துல்லாஹ் ஸாஹிப் என்பவரின் சகோதரரும்,
மர்ஹூம் சி.ஏ.கே.சின்ன அஹ்மத் முஹ்யித்தீன் என்பவரின் மச்சானும்,
மர்ஹூம் ஊண்டி எஸ்.எம்.மொகுதூம் முஹம்மத் என்பவரின் தந்தையும்,
டி.எம்.எல்.செய்யித் உமர், ஹாஜி எஸ்.டி.முஹம்மத் ஃபாரூக், ஹாஜி டி.எம்.எல்.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஹாஜி எம்.ஏ.சுல்தான் அப்துல் காதிர், ஹாஜி நோனா முஹம்மத் லெப்பை, மவ்லவீ பிரபு செய்யித் முஹ்யித்தீன் ஆலிம், ஹாஜி டபிள்யு.கே.எம்.செய்யித் முஹம்மத் ஸாலிஹ் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
செய்த பணிகள்:
இவர், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியராக சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகவும், காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் தலைமை இமாமாக சில ஆண்டுகளும் பணியாற்றியுள்ளார்.
நல்லடக்க நிகழ்வுகள்:
அன்னாரின் ஜனாஸா, பொதுமக்கள் பார்வைக்காக குத்துக்கல் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஜனவரி 11ஆம் நாள் சனிக்கிழமையன்று காலை 11.00 மணியளவில், அங்கிருந்து காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளிக்கு ஜனாஸா எடுத்துச் செல்லப்பட்டது.
காலை 11.15 மணியளவில், காயல்பட்டினம் குத்பிய்யா மன்ஸில் நிறுவனர் ஹாஜி எம்.இசட்.ஜலீல் முஹ்யித்தீன் காதிரீ ஜனாஸா தொழுகையை வழிநடத்தினார்.
அஹ்மத் நெய்னார் பள்ளியின் இமாம் அபுல்ஹஸன் ஷாதுலீ ஸதக்கலீ துஆ இறைஞ்சினார். பின்னர், பள்ளியின் மையவாடியில் - தென்கிழக்குப் பகுதியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலப்பள்ளியின் இமாம் மவ்லவீ ஷெய்கு அப்துல் காதிர் ஸூஃபீ தல்கீன் ஓதினார்.
கலந்துகொண்டோர்:
தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீயும், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ, மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.எம்.பி.செய்யித் ஹாமித் ஸிராஜீ, ‘அல்அஸ்ரார்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ, முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ, அல்ஜாமிஉஸ் ஸகீர் சிறிய குத்பா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் மக்கீ எம்.எம்.ஹாமித் லெப்பை ஃபாஸீ, மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன்,
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன்,
அஹ்மத் நெய்னார் பள்ளியின் தலைவர் ஹாஜி எஸ்.கே.இசட்.ஆப்தீன், காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் நிர்வாகிகளான ‘பட்டளை’ எம்.ஏ.மஹ்மூத் நெய்னா, அபூஸாலிஹ், கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியின் தலைவர் ‘ஜுவெல் ஜங்ஷன்’ கே.அப்துர்ரஹ்மான், அதன் செயலாளர் ‘முத்துச்சுடர்’ ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, முஹ்யித்தீன் பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ, ஜாவியா அரபிக்கல்லூரியின் நிர்வாகி ஹாஜி ச.த.ஸதக்கத்துல்லாஹ், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ,
இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத், பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், மக்கள் தொடர்பாளரும் - துணைச் செயலாளருமான ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, மூத்த செயற்குழு உறுப்பினர் ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார், இளைஞர் ஐக்கிய முன்னணியின் மூத்த தலைவர் எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் என்ற டி.எம்., காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் கே.எம்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன், காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் பி.எம்.ஏ.அப்துர்ரஹ்மான், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் சாளை நவாஸ், அதன் நகர நிர்வாகத்தைச் சேர்ந்த ஹாஜி எஸ்.ஏ.முஹ்யித்தீன், ஐக்கிய விளையாட்டு சங்க முன்னாள் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், நகர பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தூத்துக்குடி உவைஸ், தூத்துக்குடி மாநகர இளைஞரணி அமைப்பாளர் இம்ரான், அதிமுக தூத்துக்குடி மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம், மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ்,
ஜெய்ப்பூர் காயல் நல மன்ற (ஜக்வா) தலைவர் ஹாஜி எம்.ஏ.எஸ்.செய்யித் அபூ தாஹிர், ஜித்தா காயல் நற்பணி மன்ற செயலாளர் ஹாஜி சட்னி எஸ்.ஏ.கே.செய்யித் மீரான், சிங்கப்பூர் காயல் நல மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், இலங்கை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஏ.ஜவாஹிர், அதன் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி ஏ.எஸ்.அஷ்ரஃப், கத்தர் காயல் நல மன்ற மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற சேம்ஸா, ஹாஜி உமர் அனஸ் உட்பட,
நகர ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள், அங்கத்தினர் உட்பட பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ஊண்டி ஆலிம் காலமானதற்கு இரங்கல் தெரிவித்து - காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை, அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் பிரசுரங்கள் நல்லடக்கத்தின்போது வினியோகிக்கப்பட்டன.
தொகுப்புதவி:
வங்காளம் உமர் அனஸ்
ஆசிரியர் Z.A.ஷெய்கு அப்துல் காதிர்
நிஃமத்
K.J.ஷாஹுல் ஹமீத்
‘மாஸ்டர் கம்ப்யூட்டர்’ முஹம்மத் அலீ
[நல்லடக்க நிகழ்ச்சி தகவல்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன @ 13:32 / 11.01.2014] |