கருப்புச் சட்டங்களை திரும்பப் பெற நடுவண் அரசை வலியுறுத்தி வரும் பிப்ரவரி மாதம் 21ஆம் நாளன்று மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் எஸ்.கமாலுத்தீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்ம், இம்மாதம் 09ஆம் தேதியன்று காயல்பட்டினத்தில் - மாவட்ட தலைவர் எச்.ஷம்சுத்தீன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் எஸ்.கமாலுத்தீன் வரவேற்றுப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
(1) வரும் 17.01.2014 அன்று தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் - ஃபாஸிச எதிர்ப்புப் பிரச்சாரம், அனைத்துக் கட்சி தலைவர்கள் சந்திப்பு ஆகியவற்றை நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
(2) பாப்புலர் ஃப்ரண்ட் நாளானா (PFI DAY) பிப்ரவரி 17ஆம் நாளன்று, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கொடியேற்றம், குருதிக்கொடை, நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றைச் செய்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
(3) UAPA கருப்புச் சட்டங்களை நடுவண் அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் பிப்ரவரி மாதம் 21ஆம் நாளன்று, அமைப்பின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தவும், UAPA குறித்து விழிப்புணர்வு பிரசுரம் வெளியிடவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.ஜஹாங்கீர் |