காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும், காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் முன்னாள் இமாமுமான - காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சார்ந்த மவ்லவீ ஊண்டி எம்.எம்.செய்யித் முஹம்மத் பாக்கவீ ஸூஃபீ ஃகலீஃபத்துல் காதிரீ – ஜனவரி 10ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74.
அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, காயல்பட்டினம் மஸ்ஜித் அல்ஜதீத் - புதுப்பள்ளி வளாகத்தில் - பள்ளி மாணவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கக் கல்வியைப் போதிப்பதற்காக இயங்கி வரும் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியில் சுமார் 25 ஆண்டுகள் பேராசிரியராகவும்;, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் இமாமாகப் பணியாற்றியவரும், காதிரிய்யா தரீக்காவின் கலீஃபாவாகத் திகழ்ந்தவருமான அல்ஹாஜ் ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாக்கவி அவர்கள் 10-01-2014 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் சேர்ந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் பிரிவால் வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு வல்ல நாயன் ஸபூர் என்னும். பொறுமையைக் கொடுத்தருள்வானாக. எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹும் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியை வழங்கிடுவானாக! ஆமீன்.
இவண்
நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்
மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை
புதுப்பள்ளி வளாகம், தைக்கா தெரு
காயல்பட்டினம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |