காயல்பட்டினம் சொளுக்கார் தெரு தென்பகுதியில் அமைந்துள்ள ‘காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரி’யில், நாட்டு நலப்பணித் திட்ட துவக்க விழா நடைபெற்றது. கல்லூரி உதவி பேராசிரியையர் ரஊஃப் நிஸா, ஆஷா தவ்லத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை தாங்கிய கல்லூரி முதல்வர் எம்.ஏ.புகாரீ அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இவ்விழாவில், எல்.கே.மேனிலைப்பள்ளியின் முதுகலை ஆசிரியரும், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருமான ஏ.முஹம்மத் ஸித்தீக் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
நன்றியுரைக்குப் பின், இறைவேண்டலுடன் விழா நிறைவுற்றது. விழா ஏற்பாடுகளை, கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) பிரிவு மாணவியர் செய்திருந்தனர்.
தகவல்:
D.ஷேக் அப்பாஸ் ஃபைஸல் மூலமாக
ஆசிரியர் M.A.புகாரீ |