1.1.2014-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் அக்டோபர் 01 முதல் அக்டோபர் 31 வரை நடைபெற்றது.
சிறப்பு முகாம்கள் மூலமும், நேரடியாகவும் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஜனவரி 10 அன்று வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
01.10.2013 அன்று தமிழக வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை - 5.14 கோடியாக இருந்தது. இது தற்போது 5.37 கோடியாக (ஆண்கள் 2.69
கோடி, பெண்கள் 2.68 கோடி, இதரர் - 2996) உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் -
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 2,50,213 வாக்காளர்களும்,
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 2,21,845 வாக்காளர்களும்,
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 2,12,277 வாக்காளர்களும்,
ஓட்டப்பிடாரம் (SC) சட்டமன்ற 1,99,702 தொகுதியில் வாக்காளர்களும்,
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 1,96,950 வாக்காளர்களும்,
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 1,95.641 வாக்காளர்களும் உள்ளனர்.
தூத்துக்குடி தொகுதியில் வயது வாரியாக கீழ்க்காணும் விகிதாசாரத்தில் வாக்காளர்கள் உள்ளனர்:
18-19 - 31,473
20-29 - 2,40,791
30-39 - 3,11,067
40-49 - 2,73,620
50-59 - 1,91,392
60-69 - 1,33,345
70-79 - 70,993
80+ - 23,947
தமிழக வாக்காளர்கள் விபரத்தை தொகுதி வாரியாகக் காண இங்கே சொடுக்குக
தமிழக வாக்காளர்கள் விபரத்தை வயது விகிதாச்சார வாரியாகக் காண இங்கே சொடுக்குக
அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட சுருக்க முறைத்திருத்தத்திற்குப் பிறகான - தமிழக வாக்காளர்கள் விபரம் - 2013ஐக் காண இங்கே சொடுக்குக |