Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:44:09 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12750
#KOTW12750
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஐனவரி 12, 2014
வாழ்க்கையை மாற்றியமைக்கும் +2 தேர்வு: ரியாத் கா.ந.மன்றம் வழிகாட்டு பிரசுரம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4023 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“வாழ்க்கையை மாற்றியமைக்கும் ப்ளஸ் 2 தேர்வு” எனும் தலைப்பில், ரியாத் காயல் நல மன்றம் சார்பில் வழிகாட்டுப் பிரசுரம் பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது:-





காயல்பட்டினத்திலுள்ள அனைத்து பள்ளிகளின் மேல்நிலை மாணவ-மாணவியருக்கு அவரவர் பள்ளிகளின் மூலமாக இப்பிரசுரம் வினியோகிக்கப்பட்டுள்ளதோடு, இம்மாதம் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் பொதுமக்களுக்கும் வினியோகிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Salih (Chennai) [12 January 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 32444

கட் ஆப் மதிப்பெண்ணின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற ரியாத் காயல் நல மன்றத்தின் எண்ணம் வரவேற்கத்தக்கது.

ஆனால் - 1000 மதிப்பெண்கள் அல்லது அதற்கு மேல் எடுப்பது முக்கியம் அல்ல, கட் ஆப் தான் அவசியம் என்ற தங்கள் கருத்தை நிலைநிறுத்த -

நான்காவது பாடத்தில் 120 எடுத்தால் போதும் என்ற தங்களின் தகவல் - மாணவர்களை இக்கட்டான நிலையில் நிறுத்தும் என நான் நினைக்கிறேன்.

பொறியியல் மற்றும் மருத்துவம் தர வரிசை பட்டியலில் - கட் ஆப் மதிப்பெண்கள், மூன்று முக்கிய பாடங்களின் அடிப்படையில்தான் என்பது உண்மை.

பொறியியல் படிப்பைப் பொறுத்த வரை அது இயற்பியல் (Physics), வேதியல் (Chemistry), கணிதம் (Maths)

மருத்துவ படிப்பை பொறுத்த வரை அது இயற்பியல் (Physics), வேதியல் (Chemistry), உயிரியல் (Biology)

ஆனால், இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், அரசு பொது தேர்வை சுமார் 8 லட்சம் பேர் எழுதுகிறார்கள். Counselling சமயத்தில் - ஒரே கட் ஆப் மதிப்பெண்ணில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இருப்பார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்தது.

அவ்வேளைகளில் எந்த மாணவருக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என முடிவு செய்ய - அரசு, தர வரிசைப் பட்டியலை (RANKING LIST) வெளியிடும். அதில் நான்காவது பாடமும் முக்கியம் ஆகிறது.

உதாரணமாக பொறியியல் படிப்பைப் பொறுத்த வரை - பல மாணவர்கள் ஒரே கட் ஆப் என்ற சூழலில், முதலில் கணிதம் மதிப்பெண் பரிசீலிக்கப்படும். அடுத்து இயற்பியல் மதிப்பெண் பரிசீலிக்கப்படும். அடுத்து நான்காவது பாடம் (உயிரியல் / கம்ப்யூட்டர் சயின்ஸ் / அல்லது வேறு பாடம்) பரிசீலிக்கப்படும். அதன் பிறகு வயதில் மூத்தவர், இறுதியாக ரேண்டம் எண். இப்படியாக அடுத்தடுத்த பரிசீலனை அமையும்.

மருத்துவப் படிப்பை பொறுத்த வரை - பல மாணவர்கள் ஒரே கட் ஆப் என்ற சூழலில், முதலில் உயிரியல் மதிப்பெண் பரிசீலிக்கப்படும். அடுத்து வேதியல் மதிப்பெண் பரிசீலிக்கப்படும். அடுத்து நான்காவது பாடம் (கணிதம் /அல்லது வேறு பாடம்) பரிசீலிக்கப்படும். அதன் பிறகு வயதில் மூத்தவர், இறுதியாக ரேண்டம் எண் பரிசீலிக்கப்படும்.

தங்கள் பிரசுரத்தில் - நான்காவது பாடத்தில் (கணிதம்/உயிரியல்/கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்றவற்றில்) 120 எடுத்தால் போதும் என்று கூறப்பட்டுள்ளது.

120 மதிப்பெண் முதல் 200 மதிப்பெண் வரை, எத்தனை ஆயிரம் மாணவர்கள் இருப்பார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்தது.

எனவே - நல்ல கல்லூரியில், குறிப்பாக அரசு கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கோ, அண்ணா பல்கலைக்கழகம் போன்ற வளாகங்களில் பொறியியல் பயிலவோ நான்கு முக்கிய பாடங்களிலும் மாணவர் அதிக மதிப்பெண்கள் எடுப்பது மிகவும் அவசியம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Velli siddiq (Riyadh) [13 January 2014]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32447

Student score 197 medical cutoff marks with total marks 1175 good or 197.25 medical cutoff marks with total marks 900. We know very well I am last of 197.25 cutoff marks, but I am the first of 197 medical cutoff marks.

5% only Muslim of total 8 lakhs students. Kind request to all students decide medical or engineer field, follow RKWA cutoff notice Standard.

RKWA main aim avoid from dowry & bank interest from kayalpatnam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Thanks Riyad
posted by izzzadeen (chennai) [13 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32451

Salam,thanks to riyad association,ur advice correct except 120 marks matter,Salih ur suggestion 100% correct.

My daugter now study in Anna University CEG main campus,1year study fees only 17000,u get scholorship 29000 if eligeble,private college around 70000.Have good hostel safe for our girls,199 cut off get only anna university thru BC QUOTO,

ALL THE BEST OUR STUDENTS.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Salih (Chennai) [13 January 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 32452

வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்தில் - மூன்று பாடங்களில் நிறைய மதிப்பெண்களும், நான்காவது பாடத்தில் - ஆங்கிலம்/மொழி பாடம் போல குறைவான மதிப்பெண் எடுத்தாலும் (பிரசுரத்தில் காட்டப்பட்டுள்ள உதாரணம் 120 மதிப்பெண்) சரி என்று மாணவர்களுக்கு அறிவுரை சொல்லப்பட்டுள்ளது.

பிரசுரத்தில் - நான்காவது பாடம், ஆங்கிலம் / மொழிப்பாடம் போல், ("துணைப்பாடங்கள்") முக்கியம் இல்லாதது என்ற அடிப்படையில் தகவல் வழங்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் மொத்த மதிப்பெண் பங்கு வகிக்கும் என நான் கூறவில்லை. தமிழக அரசின் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பு தரவரிசைப் பட்டியலில் - நான்காவது பாடமும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை சுட்டிக்காட்டவே என் கருத்தைப் பதிவு செய்தேன்.

2012ஆம் ஆண்டு மாநில தேர்வு முடிவுகள் மூலம் இதனை விளங்கலாம்.

2012ஆம் ஆண்டு நடந்த மருத்துவ படிப்பிற்கான முதல் சுற்று கலந்தாய்வின் (கவுன்சிலிங்) நிறைவில் - 197 கட் ஆப் பெற்றிருந்த கலீல் என்ற மாணவர் - வேலூர் மருத்துவக் கல்லூரியில் இணைந்தார். அவர்தான் - முதல் ரவுண்டு கவுன்சிலிங்கில் முஸ்லிம் சமுதாயத்தில் (BCM) இருந்து தேர்வான இறுதி மாணவர்.

அவர் பெற்றிருந்த 197 கட் ஆப் மதிப்பெண்ணை, இதர 8 மாணவர்களும் பெற்றிருந்தனர்.

சமுதாய தர வரிசைப் பட்டியலில் (COMMUNITY RANK LIST) அந்த மாணவர்களின் தர வரிசை கீழ்க்காணுமாறு வெளியிடப்பட்டிருந்தது.

[சமுதாய ரேங்க் 51] ASIMA PARVEEN
[சமுதாய ரேங்க் 52] KALIL F
[சமுதாய ரேங்க் 53] NASREEN FATHIMA M
[சமுதாய ரேங்க் 54] MOHAINUDHEEN SHARUK S
[சமுதாய ரேங்க் 55] SHAHUL HAMEED A
[சமுதாய ரேங்க் 56] SYED AAMIR AHMED
[சமுதாய ரேங்க் 57] SHAJAHAN S
[சமுதாய ரேங்க் 58] KATHEEJATHUL SALIHA R
[சமுதாய ரேங்க் 59] VASIMA S

இவர்கள் அனைவரின் கட் ஆப் 197 மதிப்பெண்கள்தான். இவர்கள் அனைவரின் மொத்த மதிப்பெண்கள் (Total Marks) - முறையே - 1160, 1153, 1162, 1164, NON_STATE_BOARD, NON_STATE_BOARD, 1152, NON_STATE_BOARD, 1152. இவர்களின் தரவரிசைப் பட்டியலை அவர்களின் மொத்த மதிப்பெண்கள் (TOTAL) நிர்ணயம் செய்யவில்லை என்பது உண்மை.

இவர்கள் 9 பேரும் ஒரே கட் ஆப் (197) மதிப்பெண்ணில் இருந்தாலும், உயிரியல் பாடத்தில் 199 மதிப்பெண் எடுத்த ASIMA PARVEEN, சமுதாய ரேங்க் 51 பெற்றார். உயிரியல் பாடத்தில் 198 மதிப்பெண் எடுத்த KALIL F, சமுதாய ரேங்க் 52 பெற்றார்.

NASREEN FATHIMA M என்ற மாணவியும், MOHAINUDHEEN SHARUK S என்ற மாணவரும் உயிரியல் பாடத்தில் 197, வேதியல் பாடத்தில் 198 என சரிசமமாக எடுத்திருந்தனர். இதனால் - நான்காவது பாடம், கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட - கணிதத்தில் 200 எடுத்த NASREEN FATHIMA M சமுதாய ரேங்க் 53 பெற்றார். கணிதத்தில் 189 எடுத்த MOHAINUDHEEN SHARUK S சமுதாய ரேங்க் 54 பெற்றார்.

இவர்கள் 9 பேரில் (அதாவது, அரசு மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பிருந்த தர வரிசைப் பட்டியலில் கடைசியாக இருந்த மாணவர்கள் 9 பேரில்) ஆகக் குறைந்த மொத்த மதிப்பெண் 1152. ஆங்கிலத்தில் குறைந்த மதிப்பெண் 177, அதிகம் 192. மொழிப்பாடத்தில் குறைந்த மதிப்பெண் 186. அதிகம் 197.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...கொட்டிக் கிடக்கும் கல்வி வாய்ப்பும் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்பும்
posted by mackie noohuthambi (kayalpatnam) [13 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32453

கல்வி - அது வேலைவாய்ப்பை அதிகப்படுத்தி செல்வ செழிப்பை ஏற்படுத்தி அதன் மூலம் தானும் தன் குடும்பமும் பயன்பெற்று உற்றார் உறவினர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் தங்கள் செல்வம் பயன்பட வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி இந்த காயலநல மன்றத்தின் பணி. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக மருத்துவம் பொறியியல் பட்டப் படிப்படிப்பை மட்டுமே அது ஊக்குவிக்க முயற்சி செய்கிறது.

காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் பல்வேறு சுமார் 200 துறைகளில் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதையும் அந்த துறைகளில் வேலை வாய்ப்புக்கள் குவிந்து கிடப்பதையும் பட்டியலிட்டுக் காட்டுகிறது. புதிய தலைமுறை கல்வி இதழும் இப்படி ஒரு திறந்தவெளி கல்விகள், வேலை வாய்ப்புக்கள் பற்றி வாரம்தோறும் புது புது தகவல்களை தருகிறது.

ஒரு வாசல் அடைத்தால் அல்லாஹ் 9 வாசலை திறப்பான் என்ற செய்தி நம் இளைஞர்களுக்கு தப்பான ஒரு பார்வையை தந்துள்ளது. உண்மையில் 9 கதவுகளும் அடைக்கப் பட்டு பின்பு தட்டியபின் திறக்குமாறு அல்லாஹ் வைக்கவில்லை. அவை தாழ்பாள் போடாமல் சார்த்தி வைக்கப் பட்டுள்ளது. நாம் முயற்சி செய்து சற்று தள்ளிப் பார்த்தால் சட்டென திறந்து கொள்ளும்.

எனவே இளைஞர்கள் புது புது அர்த்தங்கள் - புது புது பார்வைகள் என்று தங்கள் எண்ண அலைகளை விரியவிட்டால் அங்கே மருத்துவம் பொறியியல் என்ற பொறிக்குள் சிக்கி தங்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்க தேவை இல்லை.

மாற்றி யோசிப்பது அல்லது வித்தியாசமாக சிந்திப்பது இதற்கு ஆங்கிலத்தில் "LATERAL THINKING"என்று சொல்வார்கள்.

"வாழப் பொருள் வேண்டும் - வாழ்வதிலும் பொருள் வேண்டும்"

அரசு தேர்வுகள் நெருங்கிவரும் இந்த சூழலில் எல்லா மாணவர்களும் பலதுறைகளைப் பற்றி சிந்தித்து, தாங்கள் பெறும் மதிப்பெண்களுக்கு அமைய தங்கள் உயர் கல்வியை தொடர்ந்து, துரித வேலைவாய்ப்பு பெற்று வாழ வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Velli siddiq (riyadh) [13 January 2014]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32454

Dear Br. Salih,

You score 197 medical cutoff marks with total marks 1175 I score 197.25 medical cutoff marks with total marks 900. Last medical sheet available, who enter medical college you or me.

275 marks scored more than me but you cannot get sheet. My 0.25 cutoff marks lead confirm sheet.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Salih (Chennai) [13 January 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 32470

சகோதரர் வெள்ளி சித்திக் அவர்களுக்கு,

தங்களின் கேள்விக்கு - எனது இரு கருத்து பதிவுகளிலும் (Comment Reference Number: 32444 & 32452) பதில் உள்ளது. நீங்கள் கூறுவது போல மாணவர் A, 197 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று (மொத்தம்: 1175), மாணவர் B, 197.25 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று (மொத்தம்: 900) இருந்தால் - கூடுதல் கட் ஆப் மதிப்பெண் பெற்றிருந்த மாணவர் B க்கு தான் இடம். இதில் எந்த இருவேறு கருத்துக்கும் இடமில்லை.

ஆனால் - மாணவர் A, 197.25 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று (மொத்தம்: 1175), மாணவர் B யும் , 197.25 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று (மொத்தம்: 900) இருந்தால் உள்ள சூழலை குறித்து தான் நான் கேள்வியாக எழுப்பியிருந்தேன்.

இரு மாணவர்கள் - ஒரே கட் ஆப் மதிப்பெண்ணில் இருக்கும் போது என்ன நடக்கும்?

கடந்த ஆண்டு - அரசு வெளியிட்ட MBBS விண்ணப்பத்தில் உள்ள விதிமுறைகள் கீழே:

PROSPECTUS FOR ADMISSION TO M.B.B.S. / B.D.S COURSES 2013–2014 SESSION

21. DETERMINATION OF RANK OF CANDIDATES OBTAINING EQUAL MARKS ( Inter-se Merit ): -

In cases, where two or more candidates obtain equal aggregate marks for 200, the rank of such candidates shall be determined on the basis of the following order, namely:-

i) Percentage in Biology or Botany and Zoology taken together in +2 examination

ii) Percentage in Chemistry in +2 examination

iii) Percentage in Fourth optional subject in +2 examination

iv) Date of birth – weightage given to seniority in age.

v) Computerized random number assigned. Higher value of random number will be taken into consideration.

இது தெளிவாக நான்காவது பாடத்தின் முக்கியத்துவத்தை தெரிவிக்கிறது. ஆரம்பமாக இருவரில் யார் உயிரியலில் அதிகம் மதிப்பெண் பெற்றவர் என பார்க்கப்படும். அதிலும் இருவரும் ஒரே மதிப்பெண் என்றால், அடுத்து வேதியல் பாடத்தில் அதிகம் மதிப்பெண் பெற்றவர் யார் என பார்க்கப்படும். அதிலும் இருவரும் ஒரே மதிப்பெண் என்றால், அடுத்து நான்காவது பாடமான கணிதமோ அல்லது வேறு பாடமோ பார்க்கப்படும்.

ஒரே கட் ஆப் மதிப்பெண்ணில் அதிகம் மாணவர்கள் இருப்பது அரிதான விசயம் அல்ல. ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதும் சூழலில் பலர் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெறுவது சாதாரணமாக நடக்ககூடிய நிகழ்ச்சி.

2012 ஆம் ஆண்டு மருத்துவ தர வரிசை (BCM) பட்டியலில் 196.75 பெற்று 10 பேர் இருந்தார்கள், 197 பெற்று 9 பேர் இருந்தார்கள், 197.75 பெற்று 7 பேர், 197.50 பெற்று 9 பேர், 197.25 பெற்று 4 பேர்.

ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்தில் தர வரிசை பட்டியல் பற்றிய முழு விபரம் வழங்கப்படவில்லை. மேலும் - ஒரே கட் ஆப் யில் பலர் இருக்கும்போது நான்காவது பாடமும் மிகவும் முக்கியம் - என்ற கட் ஆப் விதிமுறைக்கு மாறுதலான கருத்தும், பிரசுரத்தில் இடம்பெற்றிருந்ததால் தான் எனது ஐயம்.

மற்றப்படி - கட் ஆப் மதிப்பெண்ணின் முக்கியத்தை மாணவர்களுக்கு எடுத்து செல்லும் இம்மன்றத்தின் முயற்சி பாராட்டத்தக்கது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Velli siddiq (riyadh) [14 January 2014]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32489

Dear Br. Salih,

Alhamdulillah you accept for first question. STUDENT B 197.25 with total marks 900 got medical seat.

தங்களின் கேள்விக்கு - எனது இரு கருத்து பதிவுகளிலும் (Comment Reference Number: 32444 & 32452) பதில் உள்ளது. நீங்கள் கூறுவது போல மாணவர் A, 197 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று (மொத்தம்: 1175), மாணவர் B, 197.25 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று (மொத்தம்: 900) இருந்தால் - கூடுதல் கட் ஆப் மதிப்பெண் பெற்றிருந்த மாணவர் B க்கு தான் இடம். இதில் எந்த இருவேறு கருத்துக்கும் இடமில்லை.

For you second question, i answered on comments reference number: 32447

ஆனால் - மாணவர் A, 197.25 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று (மொத்தம்: 1175), மாணவர் B யும் , 197.25 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று (மொத்தம்: 900) இருந்தால் உள்ள சூழலை குறித்து தான் நான் கேள்வியாக எழுப்பியிருந்தேன்.

We know very well I am last of 197.25 cutoff marks, but I am the first of 197 medical cutoff marks.

Student B 199.25 cutoff marks with total mark 900, student B will be first of 199 cutoff marks

Student B 199 cutoff marks with total mark 900, student B will be first of 198.75 cutoff marks

Student B 198.75 cutoff marks with total mark 900, student B will be first of 198.50 cutoff marks

Student B 198.50 cutoff marks with total mark 900, student B will be first of198.25 cutoff marks

Student B 198.25 cutoff marks with total mark 900, student B will be first of 198 cutoff marks

Student B 199.25 cutoff marks with total mark 900, student B will be first of 199 cutoff marks

Student B 199.25 cutoff marks with total mark 900, student B will be first of 199 cutoff marks

Student should decide work for 0.25 marks or score 1175 marks then compare 4th subject, 5th subject, by birth date etc.

Total BCM 12TH Students in Tamilnadu maximum 30000, for medical cutoff score above 195 less than 100 BCM students.

On your email mention 197 cutoff marks was BCM rank 51 to 56.

If they follow RKWA Standard every year kayalpatnam will get 10 merit doctors from 68 Medical seat & 50 engineer score above 190 cutoffs.

RKWA Never says don’t take more than 120 marks in 4th, 5th & 6th subject. If students are 100% confident on 1st, 2nd &3rd subject scoring 600/600. Then spend time for other subjects.

We know very well average students also score in Arabic & English above 160 marks.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Soofi Ibrahim (Riyadh) [14 January 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 32495

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஆனால் - 1000 மதிப்பெண்கள் அல்லது அதற்கு மேல் எடுப்பது முக்கியம் அல்ல, கட் ஆப் தான் அவசியம் என்ற தங்கள் கருத்தை நிலைநிறுத்த – copy & paste

தங்களின் மேலான கவனத்திற்கு யாருடைய கருத்தையும் நிலைநாட்டுவதற்காக வேண்டி இந்த பிரசுரத்தை வெளியிடவில்லை என்பதை இதன் மூலமாக தெரிவித்து கொள்கிறேன்.

அதே நேரத்தில் கட் ஆப் விழிப்புணர்வை மாணவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கமே தவிர, எந்த மாணவனும் 1000க்கு மேல் மதிப்பெண் எடுக்க தேவையில்லை என்ற நோக்கமில்லை, அப்படியும் குறிப்பிட வில்லை என்றே அறிய முடிகிறது. கட் ஆப் யை உணர்ந்து படித்தால் எந்த மாணவனும் இலகுவாக தான் நினைக்கிற மேற்படிப்பை பண வீண்விரயமின்றி எட்டி பிடித்து விடலாம்.

கடந்த வருடத்தில் சுபைதா மேல்நிலை பள்ளியில் மட்டும் 10 மாணவிகளுக்கு மேல் 1000/1100 மதிப்பெண் எடுத்தும் கூட எவராலும் மெரிட் மூலமாக டாக்டர் க்கு படிக்க முடிய வில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

இதையே கட் ஆப் சூத்திரத்தை கையில் எடுத்திருந்தால் நம் சமுதாய பிரிவின் கீழ் எட்டிப்பிடிதிருக்காலமோ என்றே தோன்றுகிறது, இது தான் உண்மையும் கூட.

அடுத்து பொறியியல் மற்றும் டாக்டர் படிப்புக்கு மட்டுமே அதிக பண பேரங்கள் நடப்பதை அறிய முடிகிறது, அதையே பிரசுரத்தில் வலியுறுத்தி சொல்லி இருக்கிறோம். அதே நேரத்தில் மற்ற படிப்புக்கு எதிராக எந்த கருத்தையும் கோடிட்டு காட்ட வில்லை.

அது அவர் அவர்களின் விருப்பத்தை பொருத்தது, மேலும் இப்பிரசுரம் முழுக்க முழுக்க பொறியியல் மற்றும் டாக்டர் படிப்பு சம்பந்தமாக மட்டுமே. இதன் மூலம் பிரசுரத்தில் குறிப்பிட்டாற்போல் பெற்றோர்களின் பணம் மற்றும் மன கஷ்டத்தை குறைப்பதற்கு இது கட்டாயம் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

வஸ்ஸலாம்.
Soofi Ibrahim


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Salih (Chennai) [14 January 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 32507

சகோதரர்கள் வெள்ளி சித்தீக் மற்றும் சூஃபி ஆகியோருக்கு,

கட் ஆப் குறித்த ரியாத் மன்றத்தின் ஆர்வம் மற்றும் சேவை பாராட்டிற்குரியது. இதனை முதலில் பதிவு செய்து கொள்கிறேன்.

கட் ஆப் குறித்து வெளியிடப்பட்டுள்ள தங்கள் பிரசுரத்தில் - அரசு அறிவித்துள்ள விதிமுறைப்படி, நான்காவது பாடமும் தரவரிசை பட்டியலில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெரிவிக்கப்படவில்லை. மேலும், எடுத்துக்காட்டு அட்டவணையில், முதல் மூன்று பாடங்களுக்கு 197 க்கு மேலான மதிப்பெண்கள் உதாரணமாகக் காட்டப்பட்டு, நான்காவதான பாடத்திற்கு உதாரண மதிப்பெண்ணாக 120 மதிப்பெண் காட்டப்பட்டிருந்ததால் - இதைப் பார்க்கும் மாணவர்கள், நான்காவது பாடம் முக்கியம் அல்ல என நினைக்கத் தூண்டும் என்பதால்தான் எனது கருத்தை முதலில் பதிவு செய்தேன்.

கட் ஆப் குறித்து மாணவ சமூகத்திற்கு சொல்லப்படும் தகவல் முழுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

----------

அதே நேரத்தில் கட் ஆப் விழிப்புணர்வை மாணவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கமே தவிர, எந்த மாணவனும் 1000க்கு மேல் மதிப்பெண் எடுக்கத் தேவையில்லை என்ற நோக்கமில்லை, அப்படியும் குறிப்பிடவில்லை என்றே அறிய முடிகிறது. (C&P)

----------

கட் ஆப் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் பிரசுரத்தின் நோக்கம் என தெளிவுற கூறுவது மகிழ்ச்சிக்குரியதே. அதே நேரத்தில் 1000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தும் ஒருவரும் மெரிட்டில் மருத்துவம் செல்லவில்லை என்ற ஆதங்கத்தில், எடுத்துக்காட்டு அட்டவணையில் நான்காவது பாடத்திற்கு 120 உதாரண மதிப்பெண் வழங்கி, மொத்த மதிப்பெண் 949 முதல் 957 வரை என்று பட்டியலிட்டுக் காட்டியிருப்பது, தரவரிசைப் பட்டியல் தயாரிப்பில் (RANK LIST) நான்காவது பாடத்தின் முக்கியத்துவத்தை மாணவருக்கு உணர்த்தத் தவறிவிட்டதாகவே தெரிகிறது. அட்டவணையைத் தவிர்த்திருக்கலாம் - அல்லது அதனை தயாரிப்பதில் மேலதிக கவனம் செலுத்தியிருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.

உயிரியல் மற்றும் கணிதம் எடுக்கும் மாணவர்கள், பொதுவாக மருத்துவம் கிடைத்தால் அதற்கு, இல்லையென்றால் பொறியியல் என்ற நோக்கில்தான் அந்த இரு பாடங்களையும் எடுப்பார்கள். மருத்துவம் மட்டும் என்ற தெளிவான சிந்தனையில் உள்ளவர்கள் விலங்கியல் / தாவரவியல் பாடத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். பொறியியல் மட்டும் என்ற சிந்தனையில் உள்ளவர்கள் பொதுவாக கணிதம் / கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தைத் தேர்ந்தெடுப்பார்கள்.

தங்கள் எடுத்துக்காட்டு அட்டவணைப் படி, நான்காவது பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் - கட் ஆப் மதிப்பெண்ணில் மயிரிழையில் மருத்துவ இடத்தை இழந்த மாணவர், நான்காவது பாடமான கணிதத்தில் கவனம் செலுத்தாமல் போயிருந்தால் அவரின் நிலை என்ன? நல்ல பொறியியல் கல்லூரிக்கும் போக முடியாத நிலை ஆகி விடாதா?

கல்விச் சேவையில் பல சமூக அமைப்புகள், தங்களால் முடிந்த பணிகளை ஆற்றுகின்றனர். ஒரு அமைப்பின் திட்டம் / செயல்முறை என்பது கண்டிப்பாக அந்த அமைப்பின் நீண்ட பரிசீலனைக்குப் பிறகே வெளியிடப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

சமூக அமைப்புகளால் / கல்வி ஆர்வலர்களால், பொதுத்தேர்வை நோக்கியிருக்கும் மாணவர்களுக்கு பொதுவாக வழங்கப்படும் அறிவுரைகள், மாணவ சமுதாயம் எவ்வாறு தனது நேரத்தை மேலாண்மை செய்யவேண்டும் (TIME MANAGEMENT) என்ற அடிப்படையில் இருக்கும்.

ஒரு நாளில், ஆங்கில பாடத்திற்கு இவ்வளவு நேரம் கொடு, மொழிப்பாடத்திற்கு இவ்வளவு நேரம் கொடு, உயிரியலுக்கு இவ்வளவு நேரம், இயற்பியலுக்கு இவ்வளவு நேரம், வேதியலுக்கு இவ்வளவு நேரம், கணிதத்திற்கு இவ்வளவு நேரம் என்ற அடிப்படையிலேயே அறிவுரைகள் இருக்கும்.

தங்கள் சுய கட்டுப்பாட்டினாலும், பெற்றோரின் மேற்பார்வையினாலும், பள்ளிக்கூடங்களின் ஒத்துழைப்பினாலும் - ஒவ்வொரு ஆண்டும், நூற்றுக்கணக்கான மாணவர்கள், அனைத்து பாடங்களுக்கும் நேரம் ஒதுக்கி, படித்து, நன்றாகத் தேர்வு எழுதி, முழு மாணவர்களாக தேர்ச்சி அடைந்து - தமிழகத்தின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் பயின்றார்கள் / பயின்று வருகிறார்கள் / இறைவன் நாடினால் இனியும் பயில்வார்கள். இது சாத்தியம் இல்லாத விஷயம் அல்ல! சாதித்த பல காயலர்களும் உண்டு.

இவ்வேளையில் - அரசு மருத்துவ கல்லூரியிலும், சிறந்த பொறியியல் கல்லூரியிலும் காயல் மாணவர்கள் சேர - ரியாத் மன்றம் வெளியிட்டுள்ள பிரசுரம் / வழிகாட்டு, பொதுவாக மாணவர்களுக்கு வழங்கப்படும் அறிவுரைகளில் இருந்து பெரிதும் மாறுபடுகிறது. இந்தப் பிரசுர அறிவிப்பில் இருந்து பிறருக்கு மாற்றுக் கருத்து இருக்கும் என்பதை ரியாத் மன்றம் ஏற்றுக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன்.

தமிழக அரசு வகுத்துள்ள பாடத்திட்டங்களில் - பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 6 பாடங்கள் வழங்கப்படுகின்றன. அதில் ஆங்கிலப் பாடமும் உண்டு, மொழிப் பாடமும் உண்டு. இவை அம்மாணவனுக்கு - இலக்கியத்தை அறிமுகம் செய்யும், இலக்கணத்தை அறிமுகம் செய்யும், எழுத்துத் திறமையை அறிமுகம் செய்யும். பள்ளிக் கூடப் படிப்பினை முடித்து, கல்லூரி படிப்பைத் துவங்கவுள்ள மாணவனுக்கு இப்பாடங்களில் ஆர்வமும், தேர்ச்சியும் - வருங்காலங்களில் அவனை, பல்வேறு திறமைகளை கொண்ட, ஒரு முழு மனிதனாக உருவாக்கும்.

பாடத்திட்டங்களை வகுத்த அரசு, அவ்வயது மாணவர்களால் - முயன்றால், திட்டமிட்டால், அனைத்து பாடங்களையும் நன்றாக படித்து, தேர்வாக முடியும் - என்று கணித்தே வடிவமைக்கிறது. இந்த நம்பிக்கையை ஒவ்வொரு ஆண்டும் தமிழகமெங்கும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உண்மையாக்கி வருகிறார்கள். அவ்வப்போது நம் காயல் மாணவர்களும் கூட.

நம் மாணவர்கள் - மருத்துவர்களாகவும், நல்ல கல்லூரியில் இருந்து வெளிவரும் பொறியாளர்களாகவும், இன்னும் பல துறைகளில் வெற்றி காண, கனவு காணாத கல்வி ஆர்வலர்கள் இருக்க முடியாது. கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் இதனையே தங்கள் பிரதான குறிக்கோளாக வைத்திருப்பார்கள்.

இந்தக் குறிக்கோளை அடைய, ஒரு மாணவனை - சிறந்த வகையில் நேரத்தைப் பயன்படுத்த சொல்லலாம், பொழுதுபோக்கை தியாகம் செய்யச் சொல்லலாம், கட் ஆப் மதிப்பெண் என்ற ஒரே குறிக்கோளுக்காக, பிற பாடங்களையும், அதில் பெறும் மதிப்பெண்களையும் தியாகம் செய்யச் சொல்வது சிறந்த வழிகாட்டுதலாக இருக்க முடியாது.

வாதத்திற்கு எடுத்துக்கொண்டால், உயிரியலில் 200 எடுத்து, இயற்பியலில் 200 எடுத்து, வேதியலில் 200 எடுத்து, ஆங்கிலத்தில் 70, மொழியில் 70, கணிதத்தில் 70 எடுத்து - மொத்தம் 810 மதிப்பெண்கள் பெற்றும் ஒரு மாணவன் மருத்துவனாகலாம். ஆனால் அதில் அந்த மாணவனுக்கு பெருமை உள்ளதா? அவனது பெற்றோருக்குப் பெருமை உள்ளதா? பள்ளிக்கூடத்திற்கு பெருமை உள்ளதா? அவனை ஊக்குவித்த சமூக அமைப்புகளுக்கு பெருமை உள்ளதா?

உலகளவில், தேசிய அளவில், மாநில அளவில் சாதனை புரிய எண்ணங்களை வளர்க்க வேண்டிய சூழலில் - மருத்துவக் கல்லூரியில் நுழைய / நல்ல பொறியியல் கல்லூரியில் நுழைய, மற்ற பாடங்களை விழுந்து, விழுந்து படிக்காதே, மூன்று பாடங்களுக்கு மட்டும் அதிக நேரம் கொடு என்ற தொணியில் அறிவுரை வழங்குவது - நம் மாணவ சமுதாயம் மீது நமக்கே நம்பிக்கை இல்லை என்று கூறத் தூண்டுகிறது.

தமிழகம் எங்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களால் சாதிக்க முடிந்த - ஏன் இஸ்லாமிய சமுதாய மாணவர்களால் சாதிக்க முடிந்த - இன்னும் சொல்லப்போனால் கடந்த காலங்களில் நம் காயல் மாணவர்களாலும் சாதிக்க முடிந்த ஒரு காரியத்தை, நம் வருங்கால காயல் மாணவர்களால், சீரான முறையில் அனைத்து பாடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, சாதிக்க முடியாதா?

பன்னிரண்டாம் வகுப்பின் அனைத்துப் பாடங்களுக்கும், முறையாக நேரம் ஒதுக்கி, அனைத்துப் பாடங்களிலும் சிறந்த மதிப்பெண்கள் பெறமுடியாத மாணவர், மருத்துவ கல்லூரியில் சேர்ந்து, கடினமான மருத்துவப் பாடங்களை எவ்வாறு சமாளிப்பார்? பொறியியல் கல்லூரியில் சேர்ந்து, பொறியியல் பாடங்களை எவ்வாறு சமாளிப்பார்?

சகோதரர்களே, இதனை நீங்கள் விவாதமாக எடுத்துகொள்ளாமல், ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றமாக எடுத்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் - கட் ஆப் குறித்த விழிப்புணர்வும் வழங்கப்படவேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது; இருக்கக் கூடாது. ஆனால், அந்தத் தூண்டுதல், அந்த மாணவனை அனைத்து வகையிலும் தலை சிறந்த மாணவனாக விளங்கத் தூண்டும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான கருத்து.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Ahamed Mustafa (Dubai) [14 January 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32509

Can't agree more with Bro. Salih from Chennai. First of all Education is not to become doctors or Engineers. This is like restricting our kids to a small pool of knowledge. The curriculum or frame of Education is modulated to balance all styles & activities which a common man faces in his day to day life.

Every bit of the curriculum is important, no matter be it a Second or Third language. Together it forms a pack & this become vital in imparting the overall personality of a student.

Even in the Engineering School, we have Humanities and English Language as a subject. Lots of Field of specialized courses are on nowadays & it is not advisable for someone to focus to become a Doctor or an Engineer. This makes the Education system Stereo typed & the kids instead of coming out as talented individuals will one day become the opposite.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. நான்காவது பாடத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் .
posted by S,A,Muhammad Ali Velli (Dubai) [18 January 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32553

முதலில் இங்கே மேலே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு துண்டு பிரசுரம் மட்டுமே. முழு நீள புத்தகம் இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இத்தனை வருடங்களாக நமதூரில் உள்ள பள்ளிகளில் 1000 மதிப்பெண் பெற்ற மாணவர்களை முறையாக திட்டமிட்டு படிக்க வைத்திருந்தால் நிறைய மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு மெரிட் மூலம் தேர்வு அடைந்திருப்பார்கள் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஒரு மாணவன் முதலில் தான் என்ன துறையை தேர்வு செய்ய வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். பின்பு கடந்த ஆண்டுகளில் நம் முஸ்லிம் சமுதாய பிரிவின் கீழ் எதனை கட் ஆப் மதிப்பெண் எடுத்தால் மெரிட்டில் சேர முடியும் என அறிந்து கொண்டு முதலில் அதற்கேற்றவாறு அந்த பாடங்களில் நன்றாக படித்து அந்த மதிப்பெண் நம்மால் பெற முடியும் என்ற நம்பிக்கை வந்த பின் மீதம் உள்ள நேரங்களில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது பாடத்தையும் நன்றாக படியுங்கள். நீங்கள் 1200/1200 எடுக்க வாழ்த்துக்கள்.

This Advice is only for the students who cannot reach the cutoff by spending more time on studying other subjects. There are many average students who can achieve the cutoff if they spend little more time on the respective subject with proper guidance..

Thanks to RKWA for issuing this notice.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இப்ப நா வேணாம்... ஹூம்!!! (?!)  (12/1/2014) [Views - 3129; Comments - 6]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved