காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி வளாகத்தில், தலாவுடன் கூடிய கிணறு உள்ளது. பள்ளிவாசல் தேவைக்கு மின் மோட்டார் மூலமாகவே நீரிறைக்கப்படுவதால், குளிக்க - துவைக்க வருவோரால் மட்டும் இக்கிணறு பயன்படுத்தப்பட்டு வந்தது.
பள்ளிவாசலுக்குத் தொடர்பற்றவர்களின் முறையற்ற பயன்பாடு காரணமாக, நீண்ட நாட்களாக பூட்டி வைக்கப்பட்டுள்ள - தலாவுடன் கூடிய கிணற்றின் தற்போதைய காட்சிகள்:-
1. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[12 January 2014] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32437
இது ஒரு சாதாரண செய்தி தான், ஆனால் பல கருத்துக்களை உள்ளடக்கிய செய்தி.
* முன்பு உடல் உழைப்பு இருந்தது. நோய்கள் குறைவாக இருந்தன. இன்றோ.. அனைத்தும் இயந்திரமாக மாறி, உடல் உழைப்பே இல்லாமல், நோய்கள் அதிகமாக ஆகி விட்டன.
* கிணறுகளில் தண்ணீர் இறைத்து குளித்தார்கள், துணிகளை துவைத்தார்கள், உளூ செய்ய ஹவுதுகளுக்கு தலா-வில் தண்ணீர் இறைத்து ஊற்றினார்கள். பள்ளி ஊழியரை தவிர வருவோரும், போவோரும் தலாவில் தண்ணீர் இறைத்து ஹவுதுக்கு ஊற்றினார்கள். ஆரோக்கியமாக இருந்து, உட்கார்ந்து உளூ செய்து, நின்று தொழுதார்கள். இன்றோ நின்று உளூ செய்து, உட்கார்ந்து தொழுகிறார்கள்.
* தலா மட்டுமா மறைந்து வருகின்றது, உட்கார்ந்து உளூ செய்யும் ஹவுதுகளும் மறைந்து வருகின்றன.
* அன்று பள்ளியில் ஒரு தலா இருந்தது, உட்கார ஒரு சேர்கூட இருக்காது. இன்றோ ஒரு தலா கூட இல்லை, உட்கார்ந்து தொழுக பல பல வண்ணங்களில், பலப்பல சேர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
வல்ல அல்லாஹ், நம் அனைவர்களுக்கும் ஆரோக்கிய வாழ்வை அதிகரித்து, உட்கார்ந்து தொழுகும் சேர்களின் எண்ணிக்கையை குறைப்பானாக.
ஐயா..தலைப்பு தான் கொஞ்சம் நெருடலாக இருக்கின்றது. மனைவி அந்த 7 நாட்களில் கூறுவது போல .....!!..!! வேண்டாம்.. வேண்டாம்.. அதிகம் எழுதினால் கத்தரி நிச்சயம்.
அட்மின் அவர்களே.. " குளிக்க - துவக்க வருவோரால் " - என்பதை 'துவைக்க' என்று இருந்தால் நன்றாக இருக்கும்.
3. Re:... posted byM. Sajith (DUBAI)[12 January 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32439
இந்த தலாவை கண்டதும் மர்ஹூம் லெப்பை தம்பி மாமாவின் (கொச்சியார் தெரு) நகைச்சுவை ஞாபகம் வருகிறது...!!
பெருநாள் வேஷ்டி எடுக்கும் போது மாமா இந்த வேஷ்டி மெல்லியதாக இருக்கிறது இதே டிசைனில் கொஞ்சம் தடிமனாக வேண்டும் என்று தேடிக்கொண்டு இருக்கையில் வழமைப் போல அவரது வாயைக் கிண்டும் விதமாக அருகில் இருந்தவர்கள்..'மாமா... பெருநாளைக்கு தானே வேஷ்டி எடுக்கிறீர்கள், டிசைன்தான் பிடித்து இருக்கிறதே, 80x80 இருந்ததால் என்ன எடுக்கவேண்டியதுதானே, இதில் எதுக்கு சிக்கனம்' என்ற தொனியில் கேள்வி கேட்க...
மாமா சொன்னார்களாம் 'வாப்பா நான் உன்ன மாதிரியில்லை, குருவித்துறைப் பள்ளி தலாவில் காலையில் குளிக்கிறவன்... எம்பதுக்கு எம்பத உடுத்து குளிச்சா நூத்துக்கு நூறு வெளியே தெரியுமேன்னுதான் யோசிக்கிறேன்..' என்றார்களாம் !!
4. விமேர்சனகளுக்கு வரையறை posted byN.T,SULAIMAN (YANBU)[12 January 2014] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32442
குருவித்துறை பள்ளி என்று புனிதமான செய்தியை வெளியீட்டு விமர்சனங்ககள் எழுதுபவர்கள் சில வேண்டாத செய்திகளை விமேர்சிக்கிரார்கள் குறிப்பாக (மனைவியின் அந்த 7 நாட்கள் மற்றும் 100*100 வெளிய தெரியிது)
இதுபோன்ற விமர்சனங்களை தடை செய்ய வேண்டும் நமது இணையதளத்தில் இதெற்கு முன்பு இதுபோன்ற விமர்சனகளை பார்த்ததில்லை.
யாரையும் தனிப்பட்ட முறையில் குறை சொல்லவில்லை
நதூரின் பெருமையும் பாரம்பரியத்தையும் காப்போம்.
5. தனிமையில் தவிக்கும் தலா(க்) posted byM.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம் )[13 January 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32445
பல தலைமுறைகளுக்கு உழைத்து தற்போது ஓய்வெடுக்கும் வயதான தலா! ஓரங்கட்டப்பட்ட நிலையில் ஒரு கறுத்த கம்பாக மட்டுமே காட்சி தருகின்றது. இதைத் தழுவிய ஒரு செய்தி:
“தலாக்” எனும் மணமுறிவு தற்போது மலிந்துவிட்ட நிலையில் தொட்டதுக்கும் துடைத்ததற்கும் விட்டு பிரியும் இன்றைய இளைய தலைமுறையினர் தம் வாழக்கையைத் தொலைத்து நிற்கும் கொடுமை!
அன்று, நமதூரில் எப்போதாவது நடக்கும் “தலாக்” எனும் சொல்லைக்கூட தம் வாயால் உச்சரித்துவிடாமல் மறைமுகமாக தலாக்கம்பு முறிந்து விட்டது என நம் மூதாதையர்கள் (கம்மாக்கள்) சொல்வார்களாம். அல்லாஹ்வின் அர்ஷே குலுங்கும் அளவிற்கு நிகழும் மணமுறிவை அவர்கள் பயந்து வாழ்ந்ததால்தான் அன்றைய தலைமுறையினர் செழிப்பாக இருந்தனர்.
6. Re:... posted byS.M.I.zakariya (chennai)[13 January 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 32448
படத்தோடு வந்த கருத்துக்கள் சுவாரசியமானவை சாலை ஜியாவுதீன் அவர்களின் கருத்துக்களில் சிலவற்றில் உடன்பாடு இல்லைஎன்றாலும் அவை நம்மை சிந்திக்க தூண்டுகிறது பழைய காலத்தில் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்கின்ற போது அதில் நம்முடைய உடல் உழைப்பும் இருந்தது அதனால் நம்முடைய உடல் ஆரோக்கியமாகவும் இருந்தது இப்போது நமது மூளைக்கு கொடுக்கிற அளவு வேலையை நமது உடலுக்கு கொடுப்பது இல்லை ஆகையால் புதுசு புதுசா நிறைய நோய்கள் வருகிறது
அவ்ளுகள் போய் குழாய் தண்ணீரில் ஒளூ செய்வது ஒரு நல்ல நடைமுறை தான் அவ்ளுவில் ஒழு செய்வதில் நிறைய சுத்த கேடான விஷயங்கள் உள்ளது .என்னுடைய மாணவ பருவத்தில் ஒரு பெரிய ஆலிம் தன்னுடைய முழங்கால் வரை தண்ணீருக்குள் விட்டு கழுவுவார் இந்த மாதிரி பழக்க வழக்கங்களுக்கு இப்போது வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது என்பது நல்ல செய்தி தான்.
அன்றைய கால கட்டத்தில் நாற்காலிகளை பள்ளி வாசல்களில் பயன் படுத்த தெரியவில்லை என்பது தான் உண்மை அதனால் உடல் ரீதியான பிரச்சினை உள்ளவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்து தங்களுடைய தொழுகைகளை நிறை வேற்றினார்கள் ஆனால் நாற்காலியின் உதவியால் இன்று அவர்களால் பள்ளிகளில் வந்து தொழ முடிகிறது என்பது ஆரோகியமான விஷயம் தான்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross