செய்தி எண் (ID #) 12757 | | |
திங்கள், ஐனவரி 13, 2014 |
தி.மு.க. நகர முன்னாள் பொறுப்பாளர் காலமானார்! ஜன.14 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம்!! திரளானோர் பங்கேற்பு!!! (திருத்தப்பட்ட செய்தி) |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 6173 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (48) <> கருத்து பதிவு செய்ய |
|
திராவிட முன்னேற்றக் கழகத்தின் காயல்பட்டினம் நகர கிளை முன்னாள் பொறுப்பாளர் - காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த ‘முத்துக்கெட்டி’ எஸ்.ஏ.கே.முஹம்மத் முகைதீன் என்ற ‘அல்யவ்ம் டெக்கரேஷன் மம்மி’ இன்று மாலை 17.45 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 45.
அன்னார்,
மர்ஹூம் ‘முத்துக்கெட்டி’ ஷெய்கு அப்துல் காதிர் என்பவரின் மகனும்,
மர்ஹூம் ஷெய்கு அப்துல் காதிர் என்ற சின்னலெப்பை என்பவரின் மருமகனும்,
மர்ஹூம் கிழ்ரு முஹம்மத் லெப்பைத்தம்பி, எம்.எம்.மீராலெப்பை, எம்.எம்.ஷெய்கு முஹம்மத் ஆகியோரின் சகோதரி மகனும்,
மர்ஸூக், தைக்கா ஸாஹிப் ஆகியோரின் மைத்துனரும்,
எம்.எம்.ஷெய்கு அப்துல் காதிர், எம்.எம்.கிழ்ரு முஹம்மத், எம்.எம்.ஹபீப் முஹம்மத், எம்.எம்.அஹ்மத் நஷாத் ஆகியோரின் தந்தையுமாவார்.
அன்னாரின் ஜனாஸா, ஜனவரி 14 – செவ்வாய்க்கிழமை (இன்று) காலை 10.30 மணிக்கு, காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
திமுக காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், நகர அவைத்தலைவர் கிதுரு முஹம்மத், மாவட்ட பிரதிநிதிகளான பன்னீர் செல்வம், காதர் ஸாஹிப், வட்ட பிரதிநிதி எஸ்.ஏ.கே.ஜலீல் உள்ளிட்ட திமுகவினர், முஸ்லிம் லீக், அதிமுக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர், காயல்பட்டினம் நகர்மன்ற அங்கத்தினர் உட்பட திரளான பொதுமக்கள் நல்லடக்கத்தில் கலந்துகொண்டனர்.
முன்னதாக, திமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி, நேரில் வந்து உடலைப் பார்த்து அஞ்சலி செலுத்தினார். சென்னையிலிருக்கும் - திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தொலைபேசி வழியே குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
நேற்று (ஜனவரி 12) இரவு 22.00 மணியளவில் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, திருநெல்வேலியிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
தகவல்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
[நல்லடக்க நிகழ்ச்சி தொடர்பான கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 12:33 / 14.01.2014] |