செய்தி: ஊண்டி ஆலிம் காலமானார்! ஜன. 11 காலை 11.30 மணிக்கு சிறுநெய்னார் பள்ளியில் நல்லடக்கம்!! திரளானோர் பங்கேற்பு!!! (திருத்தப்பட்ட செய்தி!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
كل نفس ذائقة الموت
السلام عليكم ورحمة الله وبركاته
மஹ்ளரத்துல் காதிரிய்யா அரபிக் கலாசாலையின் சங்கைமிக்க முன்னாள் பேராசிரியரும், காதிரிய்யா கொடிமரத்து சிறுநைநார் பள்ளியின் முன்னாள் இமாமும், அச்செய்குள் காமில் மர்ஹூம் சி.ஏ.கே.ஷெய்க் அப்துல் காதிர் ஆலிம் என்ற ஸூஃபீ ஹஸ்ரத் சித்தீக்கில் காதிரில் காஹிரீ அவர்களின் மருமகனும், அன்னாரின் கலீபாவும் , எனது பாசத்திற்குரிய அருமை உஸ்தாத் பெருந்தகையுமான மௌலானா
மவ்லவீ ஊண்டி எம்.எம்.செய்யித் முஹம்மத் ஆலிம் பாக்கவீ ஸூஃபீ ஃகலீஃபத்துல் காதிரீ ஹஸ்ரத் அவர்களின் “ வபாத் “ செய்தி அறிந்து மிகுந்த கவலையும் ,அதிர்ச்சியும் அடைந்தேன்.
சமீபத்தில் ஊரில் நடந்த ஒரு திருமண நிகாஹ் மஜ்ளிசில்தான் அவர்களை கடைசியாக சந்தித்தேன் . அல்ஹம்துலில்லாஹ் !!!
அன்னாரின் இழப்பு காயலின் உலமா சமுதாயத்திற்கும், சகல மக்களுக்கும் , காதிரிய்யா தரீகாவிர்க்கும், “சுன்னத் வல் ஜமாஅத் “ கொள்கை கோட்பாடுகளை பின்பற்றும் அணைத்து மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
மஹ்லராவில் அன்னாரிடத்தில் பாடம் கற்கும் போது மிகவும் ,தெளிவாகவும், நிதானமாகவும் , தமாசாகவும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கும் மிகத் திறமையான பேராசிரிய பெருந்தகை அவர்களின் இழப்பு மிகப் பெரிய பேரிழப்பாகும் . அல்லாஹுதஆலா போதுமானவன் .
அல்லாஹுதஆலாவின் கட்டளைக்கு இணங்க நாம் அனைவரும் பொறுமை செய்துக்கொண்டோம் !!!
அன்னாரை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தார்கள் , உற்றார் , உறவினர்கள், மாணவர்கள் ,முரிதீன்கள் , முஹிப்பீன்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் . அல்லாஹ்விற்காக “சப்று” செய்து கொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறேன் .!!!
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரின் குற்றங்கள், குறைகளை மறைத்து , அவர்களின் மண்ணறையை ஒளிமயமாக்கி , நாளை மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் நபிமார்கள், சித்தீகீன்கள் , சுகதாக்கள் , சாளிஹீன்கள் , ஒலிமார்களோடு சேர்த்தருல்வானாக!
அண்ணல் கண்மணி நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்களின் அசல் பாகத்தில் குடியமர அவர்களுக்கும் , நம் அனைவருக்கும் நற்பாக்கியங்களை தந்தருள்வானாக ! ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன் !!!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross