Re:...பெண்கள் நினைத்தால்.... posted bymackie noohuthambi (kayalpatnam)[12 January 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32440
சென்ற சில திங்களுக்கு முன் ஒரு கனவு கவிதை இணைய தளம் ஒன்றில் வெளிவந்து, நமதூருக்குள் ஒரு பெண் கவிஞர் நடமாடிக் கொண்டிருக்கிறார். இப்போது தமிழ் சங்கத்தில் இன்னொரு சகோதரி மனித நேயம் மூலம் மக்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறார். இப்போதுல்லாம் அரசு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று முன்னணியில் இருக்கிறார்களே என்ன காரணம் என்று கேட்டபோது "மதிப்பெண்கள்" என்ற சொற்றொடரில் "பெண்கள்" என்ற வாசகம் தொக்கி நிற்கிறதே, நீங்கள் கவனிக்கவில்லையா என்று ஒருவர் கேட்டார். உண்மைதான்.
நாம் நமது சகோதரிகளின் ஆற்றல்களை கண்டறிந்து அவர்களை முதன்மைப் படுத்த தவறிவிட்டோம். நமது தலைவர் நபிகள் நாயகம் அவர்கள் வாழ்விலும் தாழ்விலும் பெண்கள் முக்கிய பங்காற்றி அவர்கள் விழி நீர் துடைதிருக்கிறார்கள். கவி பாடி மகிழ்வித்திருக்கிறார்கள்.
அல்லாஹ்வும் அவர்களை ஆண்களுக்கு நிம்மதியையும் சந்தோசத்தையும் மன அமைதியையும் பாசத்தையும் வாரி வழங்கும் காரணிகள் என்று வர்ணித்திருக்கிறான்.
இவர்கள் இன்னும் பல வெற்றிகளை பெற்று சமுதாயத்துக்கு சிறப்பு சேர்க்க வாழ்த்துக்கள். சகோதரியின் கட்டுரையை இந்த இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross