Re:... posted bySalih (Chennai)[12 January 2014] IP: 122.*.*.* India | Comment Reference Number: 32444
கட் ஆப் மதிப்பெண்ணின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற ரியாத் காயல் நல மன்றத்தின் எண்ணம் வரவேற்கத்தக்கது.
ஆனால் - 1000 மதிப்பெண்கள் அல்லது அதற்கு மேல் எடுப்பது முக்கியம் அல்ல, கட் ஆப் தான் அவசியம் என்ற தங்கள் கருத்தை நிலைநிறுத்த -
நான்காவது பாடத்தில் 120 எடுத்தால் போதும் என்ற தங்களின் தகவல் - மாணவர்களை இக்கட்டான நிலையில் நிறுத்தும் என நான் நினைக்கிறேன்.
பொறியியல் மற்றும் மருத்துவம் தர வரிசை பட்டியலில் - கட் ஆப் மதிப்பெண்கள், மூன்று முக்கிய பாடங்களின் அடிப்படையில்தான் என்பது உண்மை.
பொறியியல் படிப்பைப் பொறுத்த வரை அது இயற்பியல் (Physics), வேதியல் (Chemistry), கணிதம் (Maths)
மருத்துவ படிப்பை பொறுத்த வரை அது இயற்பியல் (Physics), வேதியல் (Chemistry), உயிரியல் (Biology)
ஆனால், இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால்,
அரசு பொது தேர்வை சுமார் 8 லட்சம் பேர் எழுதுகிறார்கள். Counselling சமயத்தில் - ஒரே கட் ஆப் மதிப்பெண்ணில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இருப்பார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்தது.
அவ்வேளைகளில் எந்த மாணவருக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என முடிவு செய்ய - அரசு, தர வரிசைப் பட்டியலை (RANKING LIST) வெளியிடும். அதில் நான்காவது பாடமும் முக்கியம் ஆகிறது.
உதாரணமாக பொறியியல் படிப்பைப் பொறுத்த வரை - பல மாணவர்கள் ஒரே கட் ஆப் என்ற சூழலில், முதலில் கணிதம் மதிப்பெண் பரிசீலிக்கப்படும். அடுத்து இயற்பியல் மதிப்பெண் பரிசீலிக்கப்படும். அடுத்து நான்காவது பாடம் (உயிரியல் / கம்ப்யூட்டர் சயின்ஸ் / அல்லது வேறு பாடம்) பரிசீலிக்கப்படும். அதன் பிறகு வயதில் மூத்தவர், இறுதியாக ரேண்டம் எண். இப்படியாக அடுத்தடுத்த பரிசீலனை அமையும்.
மருத்துவப் படிப்பை பொறுத்த வரை - பல மாணவர்கள் ஒரே கட் ஆப் என்ற சூழலில், முதலில் உயிரியல் மதிப்பெண் பரிசீலிக்கப்படும். அடுத்து வேதியல் மதிப்பெண் பரிசீலிக்கப்படும். அடுத்து நான்காவது பாடம் (கணிதம் /அல்லது வேறு பாடம்) பரிசீலிக்கப்படும். அதன் பிறகு வயதில் மூத்தவர், இறுதியாக
ரேண்டம் எண் பரிசீலிக்கப்படும்.
தங்கள் பிரசுரத்தில் - நான்காவது பாடத்தில் (கணிதம்/உயிரியல்/கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்றவற்றில்) 120 எடுத்தால் போதும் என்று கூறப்பட்டுள்ளது.
120 மதிப்பெண் முதல் 200 மதிப்பெண் வரை, எத்தனை ஆயிரம் மாணவர்கள் இருப்பார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்தது.
எனவே - நல்ல கல்லூரியில், குறிப்பாக அரசு கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கோ, அண்ணா பல்கலைக்கழகம் போன்ற வளாகங்களில் பொறியியல் பயிலவோ நான்கு முக்கிய பாடங்களிலும் மாணவர் அதிக மதிப்பெண்கள் எடுப்பது மிகவும் அவசியம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross