செய்தி: ஊண்டி ஆலிம் காலமானார்! ஜன. 11 காலை 11.30 மணிக்கு சிறுநெய்னார் பள்ளியில் நல்லடக்கம்!! திரளானோர் பங்கேற்பு!!! (திருத்தப்பட்ட செய்தி!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஆன்மீக சுடர் அணைந்தது ! posted byK.V.A.T.HABIB MOHAMED (qatar)[13 January 2014] IP: 37.*.*.* | Comment Reference Number: 32446
எங்கள் பாசத்துக்குரிய ஊண்டி ஆலிம் அவர்கள் வபாத்து செய்தி எங்களை அதிர்ச்சிக்குள்ளாகியது . எங்கள் இளம் பிராயம் முதல் ஒரு தந்தையாகவே இருந்து எங்களை வழி நடத்தினார்கள். காதிரிய்யா கொடிமர சிறு நெய்னார் பள்ளி இமாமாக இருந்ததோடு , எங்கள் ஜமாஅத் பிள்ளைங்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் , ஆன்மீக ஆசானாகவும் ஒரு தந்தையாகவும் சிறப்புற திகழ்ந்தார்கள் என்றால் அது மிகையாகாது. தன் அருமை புதல்வன் மர்ஹூம் மகுதூம் முஹம்மது ( என் பள்ளித்தோழன் ) வபாத்தான சமயம் அவர்களை சந்தித்து சலாம் கூறி ஆறுதல் சொன்ன போது , அவர்கள் என் நெற்றியில் முகந்து , எனக்கு துஆ செய்து , என் பிள்ளையை உங்கள் முகத்தில் நான் காண்கிறேன் என்று சொன்ன அந்த தருணத்தில் இருந்து கடைசி வரை அவர்கள் தன் பெற்ற பிள்ளையாகவே என்னை கருதினார்கள். அவர்களை காணும் போதெல்லாம் முடிந்த வரை பணிவிடை செய்து , அவர்கள் கரம் பற்றி முகர்ந்து அவர்களின் துஆவை பெற தவறியதே இல்லை . அவர்களை பின் தொடர்ந்து ரொம்ப காலங்கள் ம ஃ மூமாக தொழும் பாக்கியம் பெற்றவர்களில் நானும் என் சகோதரர்களும் என் குடும்பத்தார்களும் என்று என்னும் போது , பெரும் பேறாகவே கருதுகிறேன்.
அவர்கள் நம்மை விட்டு பிரிந்தாலும் அவர்களின் சன்மார்க்க உரைகள் நம்மை வழி நடத்தும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகம் இல்லை . சுன்னத் வல் ஜமாத்தில் , அதன் கோட்பாடுகளில் , ஆணித்தரமாக மக்களை நேர்வழி படுத்திய மகானாக திகழ்ந்த ஊண்டி ஹழரத் சூபி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மண்ணறையை வல்ல ரஹ்மான் விசாலமாக்கி அவனது நூரைகொண்டும் பிரகாசமாக்கி வைத்து , சுவனத்து தென்றலை சுவாசித்தவர்களாக , மறுமையில் , எம் பெருமானார் ஸல் லல் லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் ஷ ஃ பா அத்துடன் மேலான சுவன பதி அடைய கிருபை செய்வானாக ஆமீன் ! அவர்களின் சன்மார்க்க சேவைகளை அங்கீ கரிப்பானாக ஆமீன் !
குடும்பத்தார் , சூபி மன்ஜில் முஹிப்பீன்கள் , எங்கள் ஜமாத்தார் அனைவருக்கும் அழகிய பொறுமையை அல்லாஹ் வழங்குவானாக . அனைவருக்கும் என் சலாத்தையும் எங்கள் குடும்பத்தாரின் சலாத்தையும் (அஸ்ஸலாமு அலைக்கும்) சமர்ப்பிக்கிறோம் ,
மிகவும் வருத்ததுடன் ,
K.V.A.T.ஹபீப் முஹம்மது ,
K.V.A.T.கபீர் ,
M.A.C.மொஹுதூம் முஹம்மது
மற்றும்
K.V.A.T. குடும்பத்தினர்
குறுக்குத்தெரு
காயல்பட்டணம் \கத்தார்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross