Re:... posted bySalih (Chennai)[13 January 2014] IP: 122.*.*.* India | Comment Reference Number: 32470
சகோதரர் வெள்ளி சித்திக் அவர்களுக்கு,
தங்களின் கேள்விக்கு - எனது இரு கருத்து பதிவுகளிலும் (Comment Reference Number: 32444 & 32452) பதில் உள்ளது. நீங்கள் கூறுவது போல மாணவர் A, 197 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று (மொத்தம்: 1175), மாணவர் B, 197.25 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று (மொத்தம்: 900) இருந்தால் - கூடுதல் கட் ஆப் மதிப்பெண் பெற்றிருந்த மாணவர் B க்கு தான் இடம். இதில் எந்த இருவேறு கருத்துக்கும் இடமில்லை.
ஆனால் - மாணவர் A, 197.25 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று (மொத்தம்: 1175), மாணவர் B யும் , 197.25 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று (மொத்தம்: 900) இருந்தால் உள்ள சூழலை குறித்து தான் நான் கேள்வியாக எழுப்பியிருந்தேன்.
இரு மாணவர்கள் - ஒரே கட் ஆப் மதிப்பெண்ணில் இருக்கும் போது என்ன நடக்கும்?
கடந்த ஆண்டு - அரசு வெளியிட்ட MBBS விண்ணப்பத்தில் உள்ள விதிமுறைகள் கீழே:
PROSPECTUS FOR ADMISSION TO M.B.B.S. / B.D.S COURSES 2013–2014 SESSION
21. DETERMINATION OF RANK OF CANDIDATES OBTAINING EQUAL MARKS ( Inter-se Merit ): -
In cases, where two or more candidates obtain equal aggregate marks for 200, the rank of such candidates shall be determined on the basis of the following order, namely:-
i) Percentage in Biology or Botany and Zoology taken together in +2 examination
ii) Percentage in Chemistry in +2 examination
iii) Percentage in Fourth optional subject in +2 examination
iv) Date of birth – weightage given to seniority in age.
v) Computerized random number assigned. Higher value of random number will be taken into consideration.
இது தெளிவாக நான்காவது பாடத்தின் முக்கியத்துவத்தை தெரிவிக்கிறது. ஆரம்பமாக இருவரில் யார் உயிரியலில் அதிகம் மதிப்பெண் பெற்றவர் என பார்க்கப்படும். அதிலும் இருவரும் ஒரே மதிப்பெண் என்றால், அடுத்து வேதியல் பாடத்தில் அதிகம் மதிப்பெண் பெற்றவர் யார் என பார்க்கப்படும். அதிலும் இருவரும் ஒரே மதிப்பெண் என்றால், அடுத்து நான்காவது பாடமான கணிதமோ அல்லது வேறு பாடமோ பார்க்கப்படும்.
ஒரே கட் ஆப் மதிப்பெண்ணில் அதிகம் மாணவர்கள் இருப்பது அரிதான விசயம் அல்ல. ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதும் சூழலில் பலர் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெறுவது சாதாரணமாக நடக்ககூடிய நிகழ்ச்சி.
2012 ஆம் ஆண்டு மருத்துவ தர வரிசை (BCM) பட்டியலில் 196.75 பெற்று 10 பேர் இருந்தார்கள், 197 பெற்று 9 பேர் இருந்தார்கள், 197.75 பெற்று 7 பேர்,
197.50 பெற்று 9 பேர், 197.25 பெற்று 4 பேர்.
ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்தில் தர வரிசை பட்டியல் பற்றிய முழு விபரம் வழங்கப்படவில்லை. மேலும் - ஒரே கட் ஆப் யில் பலர் இருக்கும்போது நான்காவது பாடமும் மிகவும் முக்கியம் - என்ற கட் ஆப் விதிமுறைக்கு மாறுதலான கருத்தும், பிரசுரத்தில் இடம்பெற்றிருந்ததால் தான் எனது ஐயம்.
மற்றப்படி - கட் ஆப் மதிப்பெண்ணின் முக்கியத்தை மாணவர்களுக்கு எடுத்து செல்லும் இம்மன்றத்தின் முயற்சி பாராட்டத்தக்கது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross