செய்தி: தி.மு.க. நகர முன்னாள் பொறுப்பாளர் காலமானார்! ஜன.14 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம்!! திரளானோர் பங்கேற்பு!!! (திருத்தப்பட்ட செய்தி) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஓர் உறுப்பு குறைந்துவிட்டது... posted byS.K.Salih (Kayalpatnam)[14 January 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32497
வயதால் என்னை விட ஏழெட்டு வருடங்கள் மூத்தவரான இவரை, பாசமிகுதியால் ‘வா’, ‘போ’ என ஒருமையில் விளித்துப் பேசுமளவுக்கு உரிமை எடுத்துக்கொண்டவன் நான்.
நாள்தோறும் இவரது இரவு வேளை ஐக்கிய விளையாட்டு சங்கத்திலுள்ள மேடையில் கழியும். அப்படி அவரோடு கடந்த இரண்டாண்டுகளாக இணைந்திருந்ததில் எனக்கு அவருடன் ஏற்பட்ட நட்புதான் இது!
ஏற்கனவே ஒரு கருத்தாளர் கூறியுள்ளதைப் போல, செய்யும் தொழில் எதுவானாலும் கவுரவம் பார்க்காமல் ஈடுபாட்டுடன் செய்யத் தெரிந்தவர். குடும்பப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு இலக்கணமாக வாழ்ந்தவர்.
தனக்காக யாரிடமும் எதையும் கேட்டிராத இந்தக் கண்மணி, தன்னிடம் நாள் கூலிக்கு இணைந்து பணியாற்றிக்கொண்டிருந்த ஓர் அருமைச் சகோதரருக்காக - பலரிடமும் உரிமையுடன் நன்கொடை வசூலித்து, அழகான ஒரு வீட்டைக் கட்டிக் கொடுத்துள்ளார். பணிகள் நிறைவடையும் வேளையில் அல்லாஹ் இவரை அழைத்துக்கொண்டான். வெள்ளந்தியான அந்தச் சகோதரர் இவரது ஜனாஸாவைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுதது எங்கள் மனவலிமையையெல்லாம் குறைத்துவிட்டது.
“இன்னும் பொண்ணுக்கு மாப்பிளையே பேசலையே...?” என்று நான் வேடிக்கையாகக் கூறுவேன்.
“நீ முதலில் ஆர்டர் வாங்கு! அப்புறம் சூப்பர் மாப்பிளை அமையும் பாரு...” என்பார் சிரித்துக்கொண்டே.
“தொழில் ரீதியாக யாரிடமும் கோவப்பட வேண்டியது வந்தாலும், அவன் கோவப்படுவதைப் பார்க்க சிரிப்புதான் வரும்... காரணம், கோவப்படும்போதும் அவன் சிரித்துக்கொண்டேதான் பேசுவான்...” என்று, ஜனாஸா நல்லடக்கத்தின்போது, எங்கள் ஐக்கிய விளையாட்டு சங்க மேடை சகோதரர்கள் கூறக்கேட்டபோது, பழைய நினைவுகள் மனக்கண் முன் வந்து நின்றன.
நானறிந்து, யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்காதவர். அனைவரோடும் இணக்கமாகப் பழகியவர். எதிரிகள் என யாரையும் கருதாதவர்.
ஜனாஸா நல்லடக்கத்திற்கு வந்த மக்கள் திரளைக் கண்டபோது - துவக்கத்தில் சுக்கு காஃபி கடையும், பிற்காலத்தில் மேடை அலங்கார (அல்யவ்ம் டெக்கரேஷன்) நிறுவனமும் வைத்திருந்த அவர், வெறுமனே தொழில் மட்டும்தான் செய்தார் என்று என்னால் கூற முடியவில்லை. அனைவரின் மனதையும் கவர்ந்தவராகத் திகழ்ந்ததனாலேயே இந்த மக்கள் திரள் என்பதை என்னால் உணர முடிந்தது.
4 ஆண் மக்கள். 3 பேர் படித்துக்கொண்டுள்ளனர். அவர்களுள் ஒருவர் ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவில் திருக்குர்ஆன் மனனம் செய்து வருகிறார். அல்லாஹ் - மக்கள் அனைவருக்கும் எவ்வித சிரமமும் இல்லாமல் நல்வழியைக் காட்டியருள்வானாக...
மர்ஹூம் நண்பர் தன் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப் பிழைகளைப் பொருத்தருளி, மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் அனைவரக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக...
அனைவருக்கும் எனது அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross