செய்தி: தி.மு.க. நகர முன்னாள் பொறுப்பாளர் காலமானார்! ஜன.14 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம்!! திரளானோர் பங்கேற்பு!!! (திருத்தப்பட்ட செய்தி) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அனைவரையும் திரும்பி பார்க்கவும்.. இணையதளத்தில் எழுதவும்.. பிறர் பேசவும் வைத்து விட்டார்... posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[14 January 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 32499
கடின உழைப்புக்குரியவர்.. தனது தொழிலில் துணையாக வேலை செய்யும் பணியாளனும் தன்னை போலவே அணைத்து அடிப்படை வசதிகளும் பெறவேண்டும் என எண்ணம் கொண்டு அந்த பணியாளரின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்து கொடுத்தவர்..!
தனக்கென எதையும் எதிர்பார்க்காதவர், தன்னலமற்றவர், இவர் பிறந்து வளர்ந்த பகுதியின் சுற்று வட்டார மக்கள் அனைவரிடமும் நற்பெயர் பெற்று அனைவரின் நல் துவாவை பெற்றவர்.. அணைத்து வகையான உதவிகளுக்கும் வலது கரமாக இருந்து துணை புரிந்து வந்தவர்...
நேற்று இவரின் உடலகுறைவு ஏற்பட்ட செய்தியை அறிந்த மறுகணமே சுற்று வட்டார மக்களின் கண்கள் நீர்பொங்கி வடிந்தன. அனைவரும் வல்ல இறைவனிடம் இவரின் சரீர சுகத்திற்காகவும் இவரின் ஆயுள் நீட்டிப்புக்காகவும் துவா செய்தார்கள்..
ஆனால்.. இறைவனின் நாட்டம் வேறுமாதிரி அமைந்துவிட்டது... அவனின் நட்டத்தை நாம் என்ன செய்ய முடியும்..
இச்செய்தி அறிந்த மர்ஹூம் அவர்களின் அன்பை நேசித்த பெண்மணிகள் கதறி அழுவதை கண்டு எனக்கும் நிலை தடுமாறி மனது பலகீனப்பட்டு நானும் என்னை அறியாமல் கண் கலங்கி தான் போனேன்..
அட அட அப்படி ஒரு பாசத்தையும் அன்பையும் பெற்றவரா மர்ஹூம் நீங்கள்.. என எனக்குள் ஒரு நிமிடம் மனதில் சென்று போனது..
ஆரம்பத்தில் இவர் சுக்கு காப்பி தேநீர் கடை நடத்தி வந்த இவர் இனி நமக்கு இந்த சுக்கு காப்பி கடை தொடர முடியாது வேறு தொழில் பார்ப்போம் என டெக்கரேசன் தொழிலில் இறங்கி அதன் ஆழத்தை கண்டு அதன் உழைப்பில் வெற்றியும் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது..
வசதி - நடுத்தரம் - ஏழை என அவர்களின் குடும்ப சூழலுக்கு ஏற்றார் போல அவரின் விலையை பிரித்து அதன் கூலியை வாங்கி செல்வார்.. யாரிடமும் கறாராக முகம் சுளிக்கும்படியாக நடந்ததை நான் பார்க்கவுமில்லை.. பிறர் மூலம் கேள்வி படவுமில்லை..!
இவரின் மனோபாவம் வேறு வகை கொண்டது அதாவது ஒரு வழி போக்கன் - அனாதை - புத்தி சுவாதீனம் குறைந்த நபர் இவர்கள் மீது இறக்கப்பட்டு அவர்களின் தேவையான சாப்பாடு + போக்குவரத்து செலவு என எதிர்பார்பதை தனது உழைப்பின் பணத்தையும் கொடுத்து பிறரின் நன்கொடைகளையும் பெற்று அவர்களுக்கு உதவி செய்து சொந்த ஊருக்கு வழி அனுப்பி வைப்பதில் இந்த மர்ஹூமுக்கு (அல்லாஹுவின் உகப்பை நாடி)
அலாதி திருப்தி அடைவார்..
நல்லடக்கத்தின் போது நானே வியந்து விட்டேன்.. யார் அழைத்தது இந்த கூட்ட நெரிசலை இவர்கள் ஏன் இப்படி மர்ஹூமின் ஜனாசாவின் கட்டிலை போட்டி போட்டு கொண்டு தூக்குவதும் விடுவதும் பிறகு வேறொருவர் முண்டி கொண்டு தொடுவதும் மர்ஹூமை தூக்குவதும் அப்படி ஒரு ஈர்ப்பு - அன்பு - நேசம் - பிரியம் காண முடிந்தது... என்னால் நெருங்க முடியவில்லை.
மொத்தத்தில் தனது பெயரை நகர் மக்கள் மத்தியில் தனது இறுதி நாளின் முடிவில் தெரிந்து கொள்ளுங்கள் என அனைவரையும் திரும்பி பார்க்கவும்.. இணையதளத்தில் எழுதவும்.. பிறர் பேசவும் வைத்து விட்டார்...
எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி வைப்பானாக.. மர்ஹூமை பிரிந்து வாடும் குடும்பத்தார் மற்றும் யாவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுத்தருள் புரிவானாக ஆமின்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross