செய்தி: சமூகத்தை வழிநடத்த திருக்குர்ஆன் பல்கலைக் கழகம் உருவாக்க வேண்டும்! மாநிலந்தழுவிய மாமறை குர்ஆன் மனனப் போட்டியின்போது இ.யூ.முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் உரை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...திருக்குர் ஆன் பல்கலை கழகம் posted bymackie noohuthambi (kayalpatnam)[16 January 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32524
சகோதரர் அபூபக்கர் வயதில் சிறியவராக இருந்தாலும் அவருக்கு 70 வயது விவேகம் இருக்கிறது என்ற உண்மை அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அவர் வெளியிடும் பளிச்சிடும் தகவல்கள் எடுத்துக் காட்டுகின்றன. அவரை ஒரு கட்சியின் செயலாளர் என்று வேறுபடுத்திப் பார்ப்பதை விடுத்து இந்த ஊரின் மக்கள் செயலாளர் என்றே நான் பார்க்கிறேன். அவர் வெளியிட்டுள்ள ஆசை போற்றுதற்கு உரியது.
நமதூரில் KMT மருத்துவ மனை அமைவதற்கு கடற்கரையில் இருந்து சிலர் பேசிக் கொண்டிருந்தது செயல் வடிவம்பெற்று இன்று வெள்ளிவிழாவின் விளிம்பில் அது வெற்றி நடைபோடுகிறது.
யாருமே இந்த பல்கலைக் கழக சிந்தனையை யோசிக்காதபோது அவருக்கு அல்லாஹ் இந்த சிந்தனையை அவனது திருமறை மனன விழாவின்போது வெளிப் படுத்த செய்திருக்கிறான். அவர் அதற்கான முழு முயற்சிகளை மேற்கொண்டால் இன்ஷா அல்லாஹ், கூடிய விரைவில் திருக் குர் ஆன் பல்கலைக் கழகம் இந்த ஊரில் அமையும்... நிலம் இருப்பவர்கள், நிதி இருப்பவர்கள், உடல் உழைப்புள்ளவர்கள், சமுதாயத்துக்காக பாடுபடுபவர்கள், உலமாக்கள், ஹாபிழ்கள்,காரிகள், ஆட்சி அதிகாரங்களில் உள்ளவர்களிடம் நெருக்கமானவர்கள் நம்மிடையே நிறையப் பேர் இருக்கிறார்கள்.
குர் ஆன் என்று வரும்போது இதில் கருத்து வேறுபாடுகளுக்கு இடம் இல்லை. பலவீனமானது பலமிக்கது, ராவி சரி இல்லை.சொன்னவர் சரி இல்லை, கேட்டவர் சரி இல்லை என்ற பிரச்சினைக்கே இடமில்லை. சொன்னவன் அல்லாஹ். கூட்டிக் குறைத்து அவரரவர் இஷ்டம்போல் அதை சொல்ல முடியாது. இறை அச்சம் உள்ளவர்கள் இந்த குர் ஆன் பல்கலைக் கலக்கம் அமைய முழு ஒத்துழைப்பு தருவார்கள்.
இஸ்லாத்தை முதன் முதல் ஏற்றுக் கொண்டவர்கள் நபி தோழர் அபூபக்கர் அவர்கள்தான். இப்போது இந்த செய்தியை முதன்முதலாக முன்மொழிந்து உள்ளவரும் நமது தோழர் அபூபக்கர் தான். அல்லாஹ் உங்கள் உள்ளக் கிடக்கைகளை கபூல் செய்வானாக. ஆமீன். வாழ்த்துக்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross