Re:... posted byசாளை பஷீர் (ஜோன்ஸ் தெரு , மண்ணடி , சென்னை)[16 January 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 32535
சகோதரர் ஹஸனின் கவலை புரிகின்றது.
ஆனால் ஆவணப்படங்களை திரையிட்ட பிறகே யாருக்கும் அது குறித்து ஒரு முடிவிற்கு வர இயலும். முன் அனுமானங்களின் , ஊகங்களின் அடிப்படையில் தீர்ப்புரைப்பது சரியாக இருக்காது.
ஒரு காலத்தில் ஆங்கிலம் பேசுவது ஹராம் , முழு நீள காற்சட்டை அணிவது நம் பண்பாட்டிற்கு எதிரானது , ஒலி பெருக்கி = ஷைத்தானின் குரல் , ஒளிப்படம் , சலனப்படம் ஆகவே ஆகாது என தீர்ப்புகள் வெளிவந்தன. ஆனால் காலமானது அந்த தீர்ப்புகளுக்கு கொடுத்த விடையை நாம் அனைவரும் அறிவோம்.
இவ்வகையான தீர்ப்பு கொடுத்த பெருமக்களின் சமூக அக்கறையை யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. அன்றைய நாட்களில் புதிய கண்டுபிடிப்புகளும் வளரும் தொழில் நுட்பங்களும் சாமானியனை மிரள வைத்தது உண்மைதான். அதில் அந்த பெருமக்களுக்கும் விதிவிலக்கில்லை.
அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகளையும் வளரும் தொழில் நுட்பங்களையும் நாம் ஒட்டு மொத்தமாக நிராகரிக்க முடியாது. அவை மனிதன் வழியாக இறைவன் இந்த மனித குலத்திற்கு வழங்கிய அருட்கொடைகளாகும்.
அவற்றின் தவறான பயன்பாட்டிற்கு உரிய காப்புகளை செய்து கொண்டு அவற்றை நாம் முறையான வழியில் பயன்படுத்துவதே சரியாக இருக்கும்.
இந்த அருட்கொடைகளை நாம் சரியான வழியில் பயன்படுத்துவதே தவறென தீர்ப்பளித்தால் அவற்றை முறைகேடாக பயன்படுத்துவதை எப்படி தடுப்பது ?
இந்த நேரத்தில் சமகால முஜ்தஹித் அஷ்ஷேஹ் யூஸுஃப் அல் கர்ளாவி அவர்களின் மேற்கோளை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
“ படவியை { கேமிரா } நாம் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் ஒளிப்படம் கூடுமா? கூடாதா? என்ற முடிவற்ற விவாதங்களுக்குள் நாம் மூழ்கிக்கொண்டிருக்கின்றோம். வல்லரசுகளும் எதிரி நாடுகளும் முஸ்லிம்களின் நாடுகளையும் நிலப்பரப்புகளையும் இயற்கை வளங்களையும் அங்குலம் அங்குலமாக படம் பிடித்து கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்கள்”..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross