தவறான அனுமானமும், தயங்கிய கண்ணோட்டமும்.... posted byM.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.)[16 January 2014] IP: 61.*.*.* India | Comment Reference Number: 32538
ஆவணப்படங்கள் என்பது சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆடல், பாடல், நடனம் போன்ற அருவெறுப்பான காட்சிகள் கிடையாது. ஒரு சமூகத்தை ஒடுக்க நினைக்கும் அல்லது ஒழிக்க நினைக்கும் தரங்கெட்ட சினிமா கதைகள் இல்லாமல், கலாச்சாரம், பண்பாடு, சமூக அவலங்கள் போன்றவற்றை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் காலக்கண்னாடியே ஆவணப்படங்கள்.
இதில் நல்ல படிப்பினையும், கருத்தாழமும் இருக்கும். எடுத்ததற்கெல்லாம் கூடாது, மார்க்கத்தில் அனுமதி இல்லை என ஒதுக்கியும் ஒதுங்கியும் இருப்பதால்தான் நம் சமூகம் பல்வேறு இன்னல்களைச் சந்திக்க நேரிடுகின்றது. உதாரணமாக பிர சமுதாய மக்கள் நம்மை ஒரு வேண்டத்தாகதவர்கள் போல எண்ணும் அளவிற்கு சினிமா சந்தையில் நாம் சித்தரிக்கப்பாடுள்ளோம்.
சமீபத்தில் நான் பார்த்த ஒரு ஆவணப்படத்தில் நபிபெருமானாரின் அழகிய போதனைகளை முன்னிறுத்தி களவு ஹராம் எனும் கருத்தை வலியுறுத்தி அழகிய காட்சிப்பதிவுகளைக் கண்டேன். அதுபோல தி மெசேஜ் எனும் இஸ்லாமிய சரித்திரப் படம் தற்போது நம் காயலரின் கைவண்ணத்தில் தமிழில் மொழியாக்கம் செய்து வெளிவந்துள்ளது. நாம் சரித்திரங்கள் வாயிலாக படித்தறிந்த நிகழ்வுகளை காட்சியாக காணும் போது இன்னும் ஆழமாக நம் மனதில் பதிந்தது குறிப்பிடத்தக்கது.
கூடாது எனறு கூறிக்கொண்டே நம் வீடுகளில் சதா அழுகுரல் அல்லது ஆத்திரம், ஆவேசப்பேச்சுக்கள், குடியைக்கெடுக்கும் சூத்திர மந்திரங்களை பாத்திரங்களாக படைத்து நம் தாய்க்குலங்களை அடிமைபடுத்தி அன்றாடம் அடுக்கடுக்காக ஓலமிட்டு வரும் தொலைக்காட்சி தொடர்களை நம்மால் தடுக்கவோ, தவிர்க்கவோ இயலவில்லையே?
சீரழிவின் விளிம்பில் நம் தாய்க்குலங்களை இழுத்துச் செல்லும் கேடுகெட்ட சின்னத்திரை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் நல்ல ஆவனப்படங்கள் அவசியமானதே! இதில் மார்க்கத்தை நுழைக்காது மனம் திறந்து யோசித்தால் பல கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross