கருணா சிஷ்யர்களே! பதில் சொல்லுங்கள்!! posted bykavimagan (dubai)[14 March 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3255
சோவும், ரஜினியும், ஜெயாவும் இணைந்து இந்துத்துவ ஆட்சியை உருவாக்கிவிடக்கூடும் என்று பூச்சாண்டி காட்டும் நண்பர்களே!
அ) முதன்முதலில் முஸ்லிம் தீவிரவாதிகள் என்ற வார்த்தையை சட்டமன்றத்தில் பதிவு செய்தவர் கருணாநிதி என்னும் இனத்துரோகிதான் என்ற முத்துவாப்பா அவர்களது குற்றச்சாட்டுக்கு பதில் எங்கே? மழுப்பாலான பதில் வந்தால், ஆதாரங்கள் அணிவகுக்கும்.
ஆ) கோயம்புத்தூர் கலவரத்தில், காவல்துறையின் துணையோடு இந்த சமூகத்தை கருவறுத்தது கருணாநிதிதான் என்னும் Cnash அவர்களது ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுக்கு பதில் எங்கே?
இ) தாய்ச்சபையை உடைத்து, லத்தீப் அவர்கள் தலைமையில் தந்தைசபையை உருவாக்கிய பாசிச சக்தி யார்?
ஈ) அதே லத்தீப் சாஹிப் அவர்கள் சட்டமன்றத்தில் இடஒதுக்கீட்டிற்கான கோரிக்கையை வைத்தபோது, மிகக்கடுமையாக அதை மறுத்துப்பேசி,என்றோ கிடைக்க வேண்டியதை இன்றுவரை இழுத்தடித்தது யார்? வக்காலத்து வாங்குபவர்கள் பதில் சொல்ல முடியுமா?
உ) நரேந்திர மோடிக்கு எதிரான தீர்மானம் பாராளுமன்றத்தில் தோற்றுவிடக் காரணமானவர்களில் கருணாநிதிக்குப் பங்கில்லையா?
ஊ) ஒவ்வொரு ஆண்டும் பாபரி மஸ்ஜித் இடிப்பு நாளில், தமிழக
முஸ்லிம்களை, வெங்கொடுமைச் சிறையடைத்து வேதனைப்படுத்தியது கருணாநிதியா? ஜெயலலிதாவா?
எ) தனக்கு எதிராக இரண்டு இயக்கங்கள் உருவாகக் காரணமாக
இருந்தார் என்பதால், பிணையில் வரமுடியாத பலவழக்குகளை
உண்டாக்கி, குணங்குடி ஹனீபா அவர்களை பன்னிரண்டு ஆண்டுகள் பாழுஞ்சிறைக்குள் அடைத்தவர் யார்? கருணா சிஷ்யர்களே பதில் சொல்லுங்கள்.
இன்னும் எழுதிக்கொண்டே போனால் வலைதளமே வளைந்துவிடும்.
இவர்களுக்கு சவுக்கடி கொடுக்க, ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்கள் கொதித்தெழுந்திருக்கும் இந்த வேளையில், எதை எதையோ எழுதி சமூகத்திற்கு பின்னடைவு ஏற்படக் காரணமாக இருந்து விடாதீர்கள் அன்பு நண்பர்களே!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross