மாற்றி யோசி !! posted bySalai.Mohamed Mohideen (Bangalore)[18 January 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 32555
ஒரு வித்தியாசமான சூழல்... டாபிக். இந்த அருமையான கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மனம் திறந்து பேசும் போது தான் ஒரு மனிதன் ஆத்மார்த்தமான முறையில் எதை நேசிக்கிறான் என்பதனை அறிய முடிகின்றது. சதா ஒரு இறுக்கமான அல்லது நாம் இப்படிதான் அல்லது ஒரு குறுகிய வாழ்க்கை முறையில் / வட்டத்திற்குள் வசிக்கும் நம்மிடையே... இயற்கை வாழ்க்கை முறை , மாற்று அரசியல், சமூக நலன்களில் மாறுபட்ட சிந்தனை என்பவைகள் ஒரு புதிய பாதையை நோக்கி நம்மவர்கள் பயணிப்பதாக நம் சமூகத்தை வழிநடத்துவதாக நான் உணர்கின்றேன். இதற்கு மிக முக்கியமான தூண்டுதல் எழுத்தாளர் பஷீர் காக்கா என்றால் மிகையாகாது.
இங்கே பேசப்படும் பொருள் / செயல்திட்டம், சமூக அக்கறையுடன் மக்களின் வாழ்க்கை முறையை உணர்த்தும் "நல்ல ஆவணப்படம்". அவசரப்பட்டு 'கற்பனைக்கு' இடமளித்து & இது இப்படிதான் இருக்கும் ( Jumping into conclusion ) என்ற முடிவுக்கு வரவேண்டிய அவசியமில்லை. எழுத்து மேடை மையத்தில் அங்கம் வகிப்பவர்களும் சமூக ஆர்வலர்கள் மார்க்க பற்று மிக்கவர்கள் காயல் - இஸ்லாமிய கலாச்சாரத்தின் மீது அக்கறையுள்ளவர்கள் தான்.
குறுகிய பின்னோக்கிய சிந்தனையுடன் இருப்பதைவிட, நவீன யுகத்தில் மார்க்க வரைமுறைக்குட்பட்ட அனைத்து நல்ல விடயங்களையும் ஏற்று கொள்வதில் சமூக நலன்களுக்காக பயன்படுத்துவதில் தவறில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross