Re:... posted bysyed ahamed (chennai )[19 January 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 32572
தமிழனின் கருத்தையும் - அப்துல் காதர் அவர்களின் கருத்தையும் வரவேற்கிறேன்.
நமது ஊரில் பிறந்து வளர்ந்த முன்னோர்களின் வசிப்பிடமாக கொண்ட வாரிசு என ஒருவராவது நமது நகராட்சியில் வேளையில் இருக்கிறார்களா? அன்று தான் இருந்தார்களா.! இன்று தான் இருக்கிறார்களா.! ஏன் புறக்களிக்கப்படுகிறோம்.
அரசு வேளையில் சதவீதம் வேண்டும் என வலியுறுத்தி சிறை செல்லும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் அமைப்புக்கள் ஏன் சிறு நகரில் இயங்கும் நகராட்சியில் வேலை பெற்று கொடுப்பதில் கவனம் செலுத்துவதில்லை.
படித்த பட்டதாரிகள் புறக்களிக்கப்பட்டு கொல்லைப்புறமாக தவறான வழியில் முறைகேடாக நகராட்சியின் பணியில் சேர்த்து இருப்பது நாம் அறிந்து இருந்தும். பாவம் அரசு வேலை கிடைக்காதா.. என கனவில் இருக்கும் நம் சமூக பட்டதாரிகளுக்காக நமது சமூகத்திற்காக குரல் கொடுக்க எந்த அமைப்புக்கள்..! எத்தனை நபர்கள்..! நகராட்சியில் கேள்வி எழுப்பி இருப்பீர்கள் சிந்தியுங்கள்..
வேலை வாய்ப்புக்காக சிறை செல்ல வேண்டி அழைப்புக்கு அழைக்க சுவரெட்டி, சுவர் விளம்பரம் செய்யும் அமைப்புக்களும் சரி வேறு சில நமது சமூக அமைப்புகளும் சரி என்றைக்காவது நகராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை களைய ஆர்வம் எடுத்தது உண்டா..?
முதலில் சிறு நகரில் இயங்கும் நகராட்சியில் நடைபெறும் சமூகத்திற்கு எதிரான வேலைவாய்ப்பில் உள்ள முறைகேடுகளை களைய முன் வாருங்கள் பிறகு தாலுகா, மாவட்டம், மாநிலம், இந்திய நாடு என போராடலாமே.. இது சமூகத்தின் மீது அக்கறை என கூறும் அணைத்து அமைப்புகள், முஸ்லீம் கட்சிகள், பொதுநல சங்கங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross