செய்தி: “சிறுபான்மையினர் பகுதி என்பதால் அதிகாரிகள் மெத்தனமோ...?” காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகள் குறித்து அப்துல் ரஹ்மான் எம்.பி. செய்தியாளர்களிடம் கேள்வி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
"காயல்பட்டினம் சிறுபான்மையினரை உள்ளடக்கிய பகுதி என்பதால், இங்குள்ள தொடர்வண்டி நிலையத்தை அதிகாரிகள் புறக்கணிக்கும் வகையில் பணிகளில் மெத்தனம் காட்டுகிறார்களோ என்று கூட எங்களுக்குக் கருதத் தோன்றுகிறது".
"ஓர் அரசுக்கு நல்ல பெயரும், கெட்ட பெயரும் ஏற்படுவது - அதன்கீழ் செயல்படும் அதிகாரிகளால்தான். அந்த வகையில், இவர்களது இச்செயல் மத்திய அரசின் மீது இங்குள்ள மக்களை விரக்தியடையச் செய்துள்ளது".
மேல் கூறப்பட்ட கருத்துகள் உண்மையே.
என்னதான் இருந்தாலும் அதிகாரிகளை கொஞ்சம் தான் குறை சொல்ல முடியும் ,
ரயில்வே துறையை மண்டலங்கள் வாரியாக பிரித்தபோது நமது மண்டலம்(மதுரை வரை ) பக்கத்திலிருக்கும் மாநிலத்தோடு தான் இருந்தது அப்போது இங்கிருந்து கிடைக்கும் வருமானத்தின் மூலம் மண்டலம் தன்னுடைய தலைமை பீடத்தை கூடுதலாக கவனிக்க தவறியதில்லை , இதேபோல் தான் சேலமும், இப்போது தான் விடிவெள்ளி சேலத்திற்கு கிடைத்திருக்கிறது.
இப்போது இருக்கும் நிலையில் ஒருசில தொடர் வண்டியின் இணைப்புகள் கூட அவர்களுக்கு கிடைத்தது போக மீதம் தான் நமக்கு கிடைக்கிறது- நீண்ட தூர ஒரு சில வண்டிகள் கூட நெல்லையிலிருந்து புறப்பட்டு அது பக்கத்திலிருக்கும் மாநிலத்தின் முழு தேவையை பூர்த்தி செய்து சென்றடைகிறது . அதுவும் அதிகாரிகளின் குறை என்று சொல்ல முடியாது.
எதுவுமே யார் செய்தாலும் மக்களுக்கு நன்மையில் முடிந்தால் சரிதான் - வல்லோன் துணை உண்டாகட்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross