செய்தி: வட்டியில்லா நிதித்திட்டம் ‘ஜன்சேவா’ குறித்த கலந்தாலோசனைக் கூட்டம்! நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் எம்.பி. பங்கேற்கிறார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
RBI மற்றும் மத்திய அரசுடன் மலுக்கட்டி கொண்டு போராடி வருபவர் சிறந்த தொலை நோக்கு சிந்தனையாளர்.. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[19 January 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 32588
16 ஆண்டுகள் நான் UAE துபையில் பணி செய்து கொண்டு இருந்த காலத்தில் முஸ்லீம் லீக்கின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் எம்.பி. அவர்கள் UAE யில் செயல்படும் DUBAI ISLAMIC BANK கில் ஒரு கிளையில் மேலாளராக திறம்பட பணி செய்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
அவர் வங்கி நிர்வாகத்தில் நல்ல ஒரு அனுபவசாலி என்பதில் சந்தேகமில்லை. அவரின் அனுபவம் ஆலோசனை நமது சமுதாயதிற்கு பயன் உள்ளதாகவே இருக்கும். நமது இந்திய திருநாட்டில் ஒரு இசுலாமிய வங்கியை நிறுவவேண்டும் என RBI மற்றும் மத்திய அரசுடன் மலுக்கட்டி கொண்டு போராடி வருபவர் சிறந்த தொலை நோக்கு சிந்தனையாளர் மேலும் நம் இந்திய உழைப்பாளிகளை வட்டியில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். அவரின் வட்டியில்லா நிதித்திட்டம் ‘ஜன்சேவா’ குறித்த ஆலோசனை உண்மையிலேயே நமது மக்களுக்கு பயனளிக்கும் என்பதில் சிறு அளவும் சந்தேகமில்லை..
நம் நகர் மக்கள் அனைவர்களும் இந்த வட்டியில்லா வங்கி நமது நகரில் நிறுவ ஒத்தழைப்பு - ஆதரவு கொடுக்க முன் வர வேண்டும்... வட்டியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் நமது நகர் வியாபாரிகள் இந்த வங்கியால் மீளவேண்டும்.. அதற்க்கு நம்மால் இயன்ற பங்களிப்பு இந்த வங்கிக்கு மிக அவசியம்.. இன்ஷா அல்லாஹ்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross