வேண்டாம் இந்த விபரீத செயல். posted bySaalai Abdul Razzaq Lukman (Singapore)[20 January 2014] IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 32593
இது வேன்றுமென்றே சில அயோக்கியர்கள் செய்த வேலையாக தெரிகிறது.
தம்பிக்கு, சிவன் கோயில் தெருவில் அமைந்திருக்கும் ஒரு குடியிருப்பு பகுதியான 'அக்பர்ஷா' 1-ம் தெரு என்று வழிகாட்டி கம்பம் வைப்பது பற்றி அவருக்கோ அல்லது அந்த பகுதி மக்களோ அல்லது பொதுமக்களில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால், அதை அவர்கள் தாராளமாக நகராட்சி அல்லது இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க முறையிடலாம், போராடலாம்.
இந்த இணையதளத்தில் ஏற்கனவே நான் பதிந்த கருத்து, "ஆனால் அந்த பகுதிக்கு இன்னும் நகராட்சி சார்பில் பெயர் பலகை வைத்த மாதிரி தகவலோ, புகைப்பட ஆதாரமோ இல்லை. அப்படி இருக்கும்போது ஏன் இப்படி துள்ளி குதிக்கிறீர்கள்? நகராட்சி ஆவணங்களில் எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் பெயர்பலகை வைப்பார்கள்." (C&P) கமெண்ட்ஸ் # 32309
நமதூரில், தெருக்கள் என்று இல்லாமல், சுமார் 30 வருடங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் உருவான பல குடியிருப்பு பகுதிகளுக்கு,தனிப்பட்ட "நகர்கள்" என்று அழைக்கப்படுகிறது. அங்கும் இதேமாதிரி 1-ம் தெரு, 2-ம் தெரு என்று அழைக்கின்றனர். ஆனால், அங்கு வழிகாட்டி கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.
தம்பி முத்து இஸ்மாயீல், நீங்கள் குறிப்பிடும் பகுதிக்கு, நகராட்சி ஆவணங்களுக்கு மாற்றமாக, நகராட்சி சார்பாக வழிகாட்டி பலகை வைக்கும்போது, உங்கள் ஆட்சேபனையை தாரளமாக தெரிவிக்கலாம்.
நமதூரில் பல ஆண்டுகளாக அழைக்கப்படும் சில தெருக்கள், நகராட்சி ஆவணங்களில் அவ்வாறு இல்லாததால், நகராட்சி பதிவேடுகளில் எவ்வாறு இருக்கிறதோ, அந்த பெயர்களில்தான் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. (உ-ம்) தீவு தெரு, மரைக்கார் பள்ளி தெரு, ஆசாத் தெரு. இதற்கு உங்களின் எதிர்ப்பை தெரிவியுங்கள்.
அதை விட்டுவிட்டு, ("ஊரில் பிற மத சகோதரர்கள் இடையில் பிரச்சனை வருமானால் அது நகராட்சி மூலமே ஆரம்பமாகும்..! அதில் சந்தேகமில்லை..!
எங்கே போனது நீதி...? எங்கே போனது நடுலை..? யார் எடுத்து சொல்வார்கள் நகராட்சிக்கு...!
பெரும்பான்மையான மக்களின் மத்தியில் சிறுபான்மை மக்களிடம் கம்பு வெட்டி போடும் வேலையை இந்த நகராட்சி மிக அமைதியாக செய்து வருகிறது..! ) (C&P)
நகராட்சி அதன் அதிகாரத்திற்கு உட்பட்டு தான் வழிகாட்டி பலகை வைத்துள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross