காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட தெருக்களில் பெரும்பாலானவற்றுக்கு அண்மையில் தெருப்பெயர் வழிகாட்டுப் பலகை நிறுவப்பட்டது. அந்த வரிசையில், கற்புடையார் பள்ளி வட்டம் தெரு முனையிலும் பெயர்ப்பலகை நிறுவப்பட்டிருந்தது.
இன்று, அப்பகுதி வழியே சென்றபோது காணக்கிடைத்த காட்சி:-
3. Re:... posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[20 January 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 32589
எல்லாவற்றுக்கும் காரணம் நகராட்சி செய்யும் ஒருதலை பட்சமே...! ஊரில் பிற மத சகோதரர்கள் இடையில் பிரச்சனை வருமானால் அது நகராட்சி மூலமே ஆரம்பமாகும்..! அதில் சந்தேகமில்லை..!
ஒரு தனி மனிதனின் பெயர்கொண்ட தெரு பலகைக்கு ஒரு நியாயம்..! பிற பகுதி மாற்று மத மக்கள் விரும்பும் தெரு பலகைக்கு ஒரு நியாயமா...?
ஒரு சிலரால் அழைக்கப்பட்ட - நிறுவப்பட்ட கொம்புதுறை என்ற பெயர் பலகைக்கு அருகில் கடையக்குடி என்றும் சிங்கதுரை என்று ஒரு குறிப்பிட்ட சிலரால் அழைக்கப்படும் பகுதிக்கு கற்புடையார் பள்ளி வட்டம் தெரு என்று ஒருதலை பட்சமாக நகராட்சி அதிகாரிகள் செய்வதால் தான் இந்த மாதிரி ஏற்படுகிறது...
அக்பர் ஷா 1 வது தெருவிற்கு கொடுக்கும் முக்கியதுவத்தை ஏன்.. நகராட்சி சிவன் கோயில் 1 வது தெரு என்று பெயர் பலகை நிறுவவில்லை..?
அக்பர் ஷா 2 வது தெருவிற்கு கொடுக்கும் முக்கியதுவத்தை ஏன்.. நகராட்சி சிவன் கோயில் 2 வது தெரு என்று பெயர் பலகை நிறுவவில்லை..?
அக்பர் ஷா 3 வது தெருவிற்கு கொடுக்கும் முக்கியதுவத்தை ஏன் நகராட்சி சிவன் கோயில் 3 வது தெரு என்று பெயர் பலகை நிறுவவில்லை.?
எங்கே போனது நீதி...? எங்கே போனது நடுலை..? யார் எடுத்து சொல்வார்கள் நகராட்சிக்கு...!
பெரும்பான்மையான மக்களின் மத்தியில் சிறுபான்மை மக்களிடம் கம்பு வெட்டி போடும் வேலையை இந்த நகராட்சி மிக அமைதியாக செய்து வருகிறது..!
4. வேண்டாம் இந்த விபரீத செயல். posted bySaalai Abdul Razzaq Lukman (Singapore)[20 January 2014] IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 32593
இது வேன்றுமென்றே சில அயோக்கியர்கள் செய்த வேலையாக தெரிகிறது.
தம்பிக்கு, சிவன் கோயில் தெருவில் அமைந்திருக்கும் ஒரு குடியிருப்பு பகுதியான 'அக்பர்ஷா' 1-ம் தெரு என்று வழிகாட்டி கம்பம் வைப்பது பற்றி அவருக்கோ அல்லது அந்த பகுதி மக்களோ அல்லது பொதுமக்களில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால், அதை அவர்கள் தாராளமாக நகராட்சி அல்லது இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க முறையிடலாம், போராடலாம்.
இந்த இணையதளத்தில் ஏற்கனவே நான் பதிந்த கருத்து, "ஆனால் அந்த பகுதிக்கு இன்னும் நகராட்சி சார்பில் பெயர் பலகை வைத்த மாதிரி தகவலோ, புகைப்பட ஆதாரமோ இல்லை. அப்படி இருக்கும்போது ஏன் இப்படி துள்ளி குதிக்கிறீர்கள்? நகராட்சி ஆவணங்களில் எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் பெயர்பலகை வைப்பார்கள்." (C&P) கமெண்ட்ஸ் # 32309
நமதூரில், தெருக்கள் என்று இல்லாமல், சுமார் 30 வருடங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் உருவான பல குடியிருப்பு பகுதிகளுக்கு,தனிப்பட்ட "நகர்கள்" என்று அழைக்கப்படுகிறது. அங்கும் இதேமாதிரி 1-ம் தெரு, 2-ம் தெரு என்று அழைக்கின்றனர். ஆனால், அங்கு வழிகாட்டி கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.
தம்பி முத்து இஸ்மாயீல், நீங்கள் குறிப்பிடும் பகுதிக்கு, நகராட்சி ஆவணங்களுக்கு மாற்றமாக, நகராட்சி சார்பாக வழிகாட்டி பலகை வைக்கும்போது, உங்கள் ஆட்சேபனையை தாரளமாக தெரிவிக்கலாம்.
நமதூரில் பல ஆண்டுகளாக அழைக்கப்படும் சில தெருக்கள், நகராட்சி ஆவணங்களில் அவ்வாறு இல்லாததால், நகராட்சி பதிவேடுகளில் எவ்வாறு இருக்கிறதோ, அந்த பெயர்களில்தான் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. (உ-ம்) தீவு தெரு, மரைக்கார் பள்ளி தெரு, ஆசாத் தெரு. இதற்கு உங்களின் எதிர்ப்பை தெரிவியுங்கள்.
அதை விட்டுவிட்டு, ("ஊரில் பிற மத சகோதரர்கள் இடையில் பிரச்சனை வருமானால் அது நகராட்சி மூலமே ஆரம்பமாகும்..! அதில் சந்தேகமில்லை..!
எங்கே போனது நீதி...? எங்கே போனது நடுலை..? யார் எடுத்து சொல்வார்கள் நகராட்சிக்கு...!
பெரும்பான்மையான மக்களின் மத்தியில் சிறுபான்மை மக்களிடம் கம்பு வெட்டி போடும் வேலையை இந்த நகராட்சி மிக அமைதியாக செய்து வருகிறது..! ) (C&P)
நகராட்சி அதன் அதிகாரத்திற்கு உட்பட்டு தான் வழிகாட்டி பலகை வைத்துள்ளது.
5. காயீதே மில்லத் நகர். posted bySaalai Abdul Razzaq Lukman (Singapore)[20 January 2014] IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 32596
தம்பி முத்து இஸ்மாயீல், இந்த மாத நகர்மன்ற கூட்டத்திற்கான "மன்ற கூட்டப்பொருளில்" பொருள் எண் 10-ல் வரிசை எண் 4 -ஐ வாசிக்கவும். 'காயிதே மில்லத் நகர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவி அவர்களும் கையொப்பம் இட்டுள்ளார்.
மேற்படி பெயரில் எப்போது நகராட்சி சார்பில் பெயர் மாற்றப்பட்டது? என்று தகவல் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டு பதிலை பெறவும். இதற்கும் சேர்த்து உங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவும்.
மேலும் பொருள் எண் 15 படி, 1986-87 ஆண்டுகளில், துஷ்டராயர் தெரு என்பதனை, ஆசாத் தெரு என்று பெயர் மாற்றி அப்போதைய பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை அரசு ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை.
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, இதுவரை ஏன் அரசு ஆவணங்களில் பெயர் மாற்றப்படவில்லை? என்று உங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross