காயல்பட்டினம் கற்புடையார் பள்ளிவட்டம் - மஸ்ஜிதுல் ஈமான் என்றழைக்கப்படும் கற்புடையார் பள்ளியில், ஆண்டுதோறும் மீலாத் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டு மீலாத் விழா, இம்மாதம் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04.30 மணிக்கு மவ்லித் மஜ்லிஸுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து, அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ சன்மார்க்க சொற்பொழிவாற்றினார். துஆவுடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் சுற்றுப்புறப் பகுதி பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவில் அனைவருக்கும் ‘தபர்ருக்’ எனும் நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை, பள்ளியின் தலைவர் ஏ.கே.ஷம்சுத்தீன், செயலாளர் பிரபு செய்யித் அப்துர்ரஹ்மான், பொருளாளர் எம்.கே.எம்.புகாரீ, நிர்வாகிகளான டி.எம்.ஆர்.மர்ஸூக், தவ்ஹீத் உள்ளிட்டோர் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
கள உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |