கேரள மாநிலம் காஸர்கோடுவிலுள்ள காசன்காடு எனுமிடத்தில், அகில இந்திய அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டி (ஹிஃப்ழுப் போட்டி) இம்மாதம் 25, 26, 27 தேதிகளில் நடைபெறுகிறது.
வயது வரம்பின்றி அனைவரும் பங்கேற்கும் அமைப்பிலான இப்போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வசதி செய்யப்பட்டிருந்தது. காயல்பட்டினத்திலிருந்து ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவின் சார்பில்,
மவ்லவீ ஹாஃபிழ் அபூபக்கர் ஸித்தீக் மிஸ்பாஹீ,
ஹாஃபிழ் நஸீம் காதிர் ஸாஹிப்,
ஹாஃபிழ் எஸ்.எச்.ஷேக் தாவூத்,
ஹாஃபிழ் ஜெ.எம்.ஷெய்கு அப்துல் காதிர்,
ஹாஃபிழ் டூட்டி ஷெய்கு அப்துல் காதிர்,
ஹாஃபிழ் அப்துர்ரஸ்ஸாக்,
ஹாஃபிழ் ஷம்சுத்தீன் ஸூஃபீ,
ஹாஃபிழ் செய்யித் அஹ்மத் முத்துவாப்பா,
ஹாஃபிழ் ஸாலிஹ் நுஸ்கீ,
ஹாஃபிழ் பி.ஏ.முஹம்மத் உக்காஷா,
ஹாஃபிழ் முஹம்மத் ஹஸன்,
ஹாஃபிழ் அலீ ஃபஹத்
ஆகிய 12 ஹாஃபிழ்கள் பங்கேற்கவுள்ளனர்.
இவர்களுக்கு உறுதுணையாக, மத்ரஸா முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ தலைமையில்,
ஹாஜி எம்.என்.எல்.சுலைமான்,
ஹாஜி எம்.ஐ.தமீமுல் அன்ஸாரீ,
ஹாஃபிழ் என்.டி.ஸதக்கத்துல்லாஹ்,
ஹாஜி ஏ.எம்.நூர் முஹம்மத் ஜக்கரிய்யா,
எம்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன்,
மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ,
எஸ்.ஐ.அஹ்மத் முஸ்தஃபா
ஆகிய - மத்ரஸாவின் ஆசிரியர்கள் அபிமானிகள் இணைந்து, இம்மாதம் 18ஆம் தேதி காலையில், மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் வளாகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
தகவல்:
ஹாஃபிழ் ஃபரீத் மன்ஸூர் |