காயல்பட்டினம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியில் ‘ஆலிமா’ மற்றும் ‘தீனிய்யாத்’ பயிலும் மாணவியருக்காக, ‘திறமைக்கு ஒரு சவால்’ எனும் தலைப்பில், ஆண்டுதோறும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுவது வழமை. நடப்பாண்டு போட்டிகள், இம்மாதம் 14, 15, 16 தேதிகளில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றன.
ஆன்மிகமும், மூட நம்பிக்கையும்
உலக அமைதிக்குத் தீர்வு என்ன?
ஆடம்பர உலகமும், அழியா மறுமையும்
ஆகிய தலைப்பில் ‘ஆலிமா’ பிரிவின் 3 ஆண்டு மாணவியருக்கும்,
அல்லாஹ்வை நினைவுகூர்வோம்
முதல் விசாரணை (தொழுகை)
இறை நம்பிக்கை (தவக்குல்)
மாற்றாருடன் மாநபி
ஆகிய தலைப்புகளில், ‘தீனிய்யாத்’ பிரிவின் முதல் 4 ஆண்டு வகுப்புகளின் மாணவியருக்கும் பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன.
‘தீனிய்யாத்’ பிரிவின் இதர 4 ஆண்டு வகுப்புகளின் மாணவியருக்கு திருமறை குர்ஆன் மனனப் போட்டி நடத்தப்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கும், கடந்த ஓராண்டில் கல்லூரியின் அனைத்து வகுப்புகளிலும் முதலிடங்களைப் பெற்ற மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
அனைத்து நிகழ்ச்சிகளிலும், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் திரளாகக் கலந்துகொண்டனர். ஆண்களுக்கும் தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியில் கடந்தாண்டு நடத்தப்பட்ட ‘திறமைக்கு ஒரு சவால்’ போட்டிகள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |