காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் ஆக்கங்கள் பிரிவின் கீழ் பேசும் படம் பகுதியில் கீழ் நெய்னார் தெருவை சார்ந்த அபு தாபி வாழ் காயலர் ஹமீது சுல்தான் எடுத்த படம் வெளியிடப்பட்டுள்ளது.
அதனை காண இங்கு அழுத்தவும்.
இப்பகுதிக்கான புகைப்படங்கள் வாசகர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. சமர்ப்பிக்கப்படும் படங்கள் குறித்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு:-
1. புகைப்படங்கள் காயல்பட்டினம் எல்லைக்குள் எடுக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். காயலர்கள் - பிற இடங்களில் எடுத்த புகைப்படங்களுக்கான பகுதி பின்னர் அறிமுகம் செய்யப்படும்
2. புகைப்படங்கள் - நகர வாழ்க்கை முறை, இயற்கை காட்சிகள் உட்பட சுவாராசியமான எந்த அம்சத்தையும் அடங்கியவையாக இருக்கலாம்.
3. புகைப்படங்கள் - காயல்பட்டணம்.காம் இணையதளத்தில், பேசும் படம் பகுதி துவக்கப்பட்ட பின்பு (டிசம்பர் 19, 2013) எடுக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.
4. புகைப்படங்கள் குறைந்தது 650 பிக்சல் (pixels) அகலம் கொண்டவையாக இருக்க வேண்டும்
5. சமர்ப்பிக்கப்படும் புகைப்படங்கள் - JPG வடிவில் இருக்க வேண்டும்
6. சமர்ப்பிக்கப்படும் புகைப்படங்கள் FACEBOOK உட்பட வேறு எந்த ஊடகங்களிலும் இதற்கு முன்னர் வெளியிடப்பட்டவையாக இருக்க கூடாது.
7. புகைப்படங்களுக்கான காப்புரிமை - புகைப்படம் எடுத்தவரையே சாரும். காயல்பட்டணம்.காம், இணையதளத்தின் பெயரை, படத்தில் இணைக்க,
புகைப்படம் சமர்ப்பிப்பவர் அனுமதி வழங்க வேண்டும்
8. புகைப்படங்கள் - admin@kayalpatnam.com - என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படவேண்டும்
9. புகைப்படங்களுடன் - புகைப்படம் எடுத்தவர் பெயர், அவரின் புகைப்படம், அவர் குறித்த சிறு தகவல், புகைப்படம் எடுக்கப்பட்ட இடம், அது
குறித்த சிறு விளக்கம் ஆகியவையும் இணைத்து அனுப்பப்படவேண்டும்
10. ஆசிரியர் குழுவால் தேர்வு செய்யப்படும் புகைப்படங்கள் பேசும் படம் பகுதியில் வெளியிடப்படும்
|