மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் திட்டங்களை திறம்பட அமல்படுத்திய மாநிலங்களுக்கான - 2012-13 வருடத்திய - விருதுகள், புது டில்லியில் ஜனவரி 21 அன்று வழங்கப்பட்டது. பல்வேறு பிரிவுகளுக்கான விருதுகளை இந்திய ஜனாதிபதி பிரணாப் முக்கர்ஜி வழங்கினார். துறை அமைச்சர் கிரிஜா வியாஸ் அப்போது உடனிருந்தார்.
ஏழை-எளிய மக்களுக்கான மூன்று திட்டங்களை மக்களுக்கு பயன் அளிக்ககூடிய வகையில் (Effective Enforcement) அமல்படுத்திய மாநிலம் பிரிவில் - சிறந்த மாநில விருது தமிழக அரசுக்கு கிடைத்தது.
தமிழக அரசு சார்பாக இவ்விருதினை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி, அத்துறையின் முதன்மை செயலாளர் கே.பணீந்திர ரெட்டி IAS, நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே IAS ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross