முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் இம்மாதம் 28ஆம் தேதியன்று ‘சிறை செல்லும் போராட்டம்’ நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து விளக்குவதற்காக, அவ்வமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் - இன்று (ஜனவரி 24) இரவு 19.00 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் ‘ஜனவரி 28 விளக்கப் பொதுக்கூட்டம்’ நடைபெற்றது.
அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஏ.அப்பாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட செயலாளர் கே.எம்.அய்யூப் துவக்கவுரையாற்ற, மாநில துணைப் பொதுச் செயலாளர் எம்.முஹம்மத் யூஸுஃப் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
கூட்ட ஏற்பாடுகளை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கள உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
படங்கள்:
A.K.இம்ரான் |