திருச்செந்தூர் பள்ளிவாசல் அருகில் அமைந்துள்ள மதுக்கடையை அகற்றிட வலியுறுத்தி, சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்திய (எஸ்.டி.பி.ஐ.) சார்பில் காயல்பட்டினம் நகரெங்கும் பின்வருமாறு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக அவ்வமைப்பின் சார்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, எஸ்.டி.பி.ஐ. தூத்துக்குடி மாவட்ட தலைவர் காதர் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
“திருச்செந்தூர் பொதுமக்களுக்கு இடையூறாகவும், அரசு விதிக்கு எதிராகவும், மத சுதந்திரதிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் - பள்ளிவாசலிலிருந்து 40 மீட்டர் தொலைவில் உள்ள மதுபானக் கடை எண் 9982ஐ உடனே அகற்றி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தரும்படி அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
மேலும் இக்கடையிலிருந்து (9982) மீட்டர் தொலைவில் பார் வசதியுடன் 10062 என்ற மதுபானக் கடை இருப்பதால் 9982ஐ உடனே அகற்றி, சுகாதார சீர்கேட்டைத் தடுக்கும் படியும், அமைதியை நிலைநாட்டுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
இட மாறுதலுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், இக்கோரிக்கையை விரைவில் நிறைவேற்றி தருவதாகவும் மாவட்ட ஆட்சியாளர் வாக்குறுதி அளித்ததன் பேரில், மதுகடைக்கு எதிரான மதுக்கடை முற்றுகைப் போராட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் நிகழ்ச்சியில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் காதர் முகைதீன், பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் சம்சுதீன், காயல் சலூன் ஷேக் மற்றும் காயல்பட்டினம் நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
செய்யது பாசுல் சமீர்
மாவட்ட பொதுச் செயலாளர் - SDPI |