Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:24:52 PM
சனி | 5 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1892, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்07:48
மறைவு18:06மறைவு19:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2005:44
உச்சி
12:06
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2718:5119:16
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12855
#KOTW12855
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 24, 2014
திமுகவில் இருந்து மு.க.அழகிரி தற்காலிகமாக நீக்கம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2573 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

திமுகவில் இருந்து தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி தற்காலிகமாக நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

மு.க. அழகிரி இனியும் தொடர்ந்து கழகத்தில் நீடிப்பது முறையல்ல என்ற காரணத்தாலும், அது கழகத்தின் கட்டுப்பாட்டை மேலும் குலைத்து விடும் என்பதாலும், அவர், தி.மு.கழக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக கட்சித் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"கட்சிக்குள் ஏற்படும் அபிப்பிராயப் பேதங்கள், கோபதாபங்கள் இவைகளைப் பற்றி முறையிட, கட்சிக்குள்ளேயே முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் தலைமைக் கழகத்தில் இருக்கின்றது.

இந்த நிலையில், தங்கள் எண்ணங்களை வெளியிடவும், கட்சியின் கட்டுப்பாட்டைக்குலைக்காமல் காப்பாற்றவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் முறைப்படியுள்ள கழக அமைப்புகளைக் கலந்து பேசாமலும், அந்த அமைப்புகளை மதிக்காமலும், வேண்டுமென்றே திட்டமிட்டு, கழக அணியோடு கூட்டணி சேர நினைக்கின்ற கட்சிகளின் தலைமையைப் பற்றி அவதூறு கூறி கூட்டணி ஏற்படுவதைக் குலைக்க முயற்சித்தும், திராவிட இயக்கம் தொடக்க முதல் இதுவரையில் விரும்பாததும், வெறுத்து ஒதுக்குவதுமான சாதிச்சச்சரவுகள்; இயக்கத்திற்குள் ஏற்பட்டிருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி; தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு சிலர் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் தி.மு. கழகத் தோழர்கள் சிலர் மீது பி.சி.ஆர் எனும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நடவடிக்கை எடுக்க, துணை போகிற துரோகச் செயலில் ஈடுபட்ட சிலர் மீதெல்லாம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு துரோகச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தும், முறையற்ற விவாதங்களில் நேரிடையாகவே ஈடுபட்டும், கழகச் செயல் வீரர்களை தொடர்ந்து பணியாற்ற வேண்டாமென்று கூறியும், குழப்பம் விளைவிக்க முயன்ற தென் மண்டலக் கழக அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி இனியும் தொடர்ந்து கழகத்தில் நீடிப்பது முறையல்ல என்ற காரணத்தாலும், அது கழகத்தின் கட்டுப்பாட்டை மேலும் குலைத்து விடும் என்பதாலும், அவர், தி.மு. கழக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

கழகத்தின் நன்மைக்காக தெரிவித்துள்ள முடிவான இந்தக் கருத்தினை,கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஏற்று, ஒற்றுமை யோடும், கட்டுப்பாட்டோடும் கழகம் நடப்பதற்கு உடன்பிறப்புகள் அனைவரும் துணை நிற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்"


என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
தி இந்து


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. எங்கே வாரிசு அரசியல்?
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [24 January 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32672

அண்மையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து உறுப்பினர்களின் ஒற்றுமையை ஒட்டுமொத்தமாக பெற்று வெற்றி வழியை தேடும் இத்தருணத்தில், தென் மண்டல சிங்கம் என்று வர்ணிப்புக்குள்ளான வலிமை மிகு தலைகளில் ஒருவரான அழகிரியை நீக்கியது ஒரு துணிச்சலான நடவடிக்கை!

ஐந்து பேர் கொண்ட கட்சியானாலும் தலைமைக்கு கட்டுபடுபவர்தான் கட்சியின் கொள்கையை காப்பாற்றியவராவார்!

தலைமையை தூக்கிஎறிவது என்பது,தோணியின் துடுப்பை தவிர்ப்பதற்கு சமமாகும்,துடிப்பில்லாத் தோணி எக்காலத்தில். எந் திசையில் கரையை எட்டும் என்று எவராலும் சொல்ல முடியாது!

கொள்கை கோபுரத்தில் பிரகாசித்துக்கொண்டிருக்கும் தி.மு.க வில் அவ்ஒளியை மங்க செய்யும் முயற்சியில் முனைவது தன்மகனாக இருந்தாலும் எடுத்தெறிய தயங்கோம் என்ற இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாய் திகழ்வதுதான் தி.மு.க.

துணிச்சலான நடவடிக்கை,தன் இனம் என்று பாராமல் தன் தனையனுக்கெதிரான தன்னலமற்ற தலைமையின் இம்முடிவிலிருந்து வாரிசுகளுக்கே தி.மு.க வை தாரைவார்த்து விட்டார் என்று இதுவரைபழித்தவர்கள் இப்போதாவது சற்று விழிப்பார்களா?

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்,
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...கடமை கண்ணியம் கட்டுப்பாடு
posted by N,T.SULAIMAN (YANBU KSA) [24 January 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 32681

வாரிசு அரசியல் வாரிசு அரசியல் என்று வாய் கிழிய மேடைதோறும் ஓலமிட்டு ஒப்பாரிவைத்து பேசியவர்களுக்கெல்லாம் சம்மட்டி அடிகொடுத்தார்ப்போல் இதுதான் கழகம் இதுதான் கட்டுப்பாடு என்று தென்னகத்தின் ஜான்பவான் போல் வளம் வந்த கழகத்தலைவரின் வாரிசு என்றுகூடப்பார்க்காமல் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி இருக்கிற இந்த துணிச்சலான முடிவு இந்திய அரசியலிலே இதுதான் கழகம் இதுதான் கொள்கை இதுதான் கட்டுப்பாடு என்று மீண்டும் பறைசாட்டி இருக்கிறது

வாழ்க தி.மு.கழகம்

ஓங்குக கழக புகழ்

என்றும் கழக தொண்டன்

N .T .SULAIMAN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [24 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32688

இந்த நாட்டிய நாடகம் 6 மாத காலம் மட்டுக்கும்தான் அஞ்ச நெஞ்சன் கூட ஆதரவு தொண்டர் அழைத்து ஆலோசை கூட்டம் போட்டு தொண்டர்களை சும்மா இருக்க சொலி இருக்கிறார்.பிப் இரண்டாம் வாரம் எல்லா கூட்டணி கதையும் தெரியவரும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...ayyaa...ithu stundin vuchakattam....
posted by Muhammad Nooh KA. ( Sharafiyyah.Jeddah.) [24 January 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 32689

வழமைப்போல அய்யாவின் அரசியல் ஸ்டன்ட் தானுங்கோ இதுவும். அய்யா அடுத்த எலேச்சனில் எப்படியும் வெற்றி பெறவேண்டும் என்று இப்போதே தயாராகி விட்டார். இந்த அரசியல்வாதிகளை இனியும் நம்பிக்கொண்டா இஉர்க்கிரார்கல் அறிந்த மக்கள். அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இது அரசியில் தந்திர நாடகமே.
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [24 January 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 32691

தி மு க கட்சி தலைவரின் எதிர்பார்ப்பு கூட்டணி சுமூகமாக முடிந்த பின் இந்த அழகிரி திரும்பவும் உள்ளே அழைக்கப்பட்டு அவர் வகித்து வந்த பழைய பொறுப்புக்கள் அளிக்கப்படும். அதுவரை ஓய்வு எடுக்கட்டும். இது அரசியில் தந்திர நாடகமே. தேர்தல் நெருக்குகிறது திமுக தொண்டர்கள் புத்துணர்ச்சி பெற திமுக தலைமையிலிருந்து இருந்து தற்போதைக்கு மகிழ்ச்சியான செய்தி அளிக்கப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by syed ahamed (chennai ) [25 January 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 32694

திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கம்:

திமுக + தேமுதிக கூட்டணி கன்பார்ம் என்பதை இப்படியும் சொல்லலாம் போல...!

வாக்களிக்கும் சராசரி மனிதனை எப்படியோ முட்டாளாக்கும் செயல்களின் சதி வேலை ஆரம்பம்தான் இச்செயல்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
DCW தொழிற்சாலையில் தீ!  (24/1/2014) [Views - 3095; Comments - 3]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved