ஜனவரி 25ஆம் நாள் தேசிய வாக்காளர் நாளை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு அவரவர் வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி / கல்லூரியில் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:-
25.01.2014 தேதியன்று தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடி அமைந்துள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் தேசிய வாக்காளர் தினம் 25.01.2014 அன்று கொண்டாடப்படும்.
01.01.2014ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு 10.01.2014 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் புதிதாக வாக்காளர்களாக சேர்க்கப்பட்டவர்களுக்கு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி / கல்லூரியில் வைத்து வாக்கு சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை 25.01.2014 அன்று வழங்கப்படும்.
புதிதாக வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளவர்கள் 25.01.2014 அன்று சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி / கல்லூரிக்குச் சென்று, தங்களது புகைப்பட அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
01.01.2014இல் 18 வயது பூர்த்தியானவார்கள் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க மனுச் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |