மலேஷிய காயல் நல மன்றம் துவக்கம், பெங்களூரு காயல் நல மன்றத்தின் சார்பில், காயல்பட்டினம் நகர மாணவர்களுக்காக திறக்கப்பட்டுள்ள மாணவர் தங்கும் விடுதி ஆகியவற்றுக்கு, ஐக்கிய அரபு அமீரகம் அபூதபீ காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அமீரக தலைநகர் அபுதாபி காயல் நல மன்றத்தின் 18ஆவது செயற்குழு கூட்டம் 17 - 01 - 2014 வெள்ளிக்கிழமை மாலை மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் DR. ஹமீது யாசர் அவர்களின் தலைமையில் ஜனாப். V.S.T. ஷேக்னா லெப்பை அவர்களின் இல்லத்தில் வைத்து கூடியது. மவ்லவீ ஹாபிஃழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் மஹ்ழரீ அவர்கள் இறைமறை கிராஅத் ஓத கூட்டம் துவங்கியது.
3ஆவது பொதுக்குழுவின் கணக்குகள் ஒப்புதல்:
3ஆவது பொதுக்குழுவின் வரவு செலவு கணக்குகள் மன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டு கூடியிருந்த செயற்குழு உறுப்பினர்கள் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டது.
மன்ற நிர்வாகிகளின் பதவி நீட்டிப்பு:
நடப்பு மன்ற நிர்வாகிகளின் பதவிகள் மேலும் ஒரு வருட காலம் நீட்டிக்கப்பட முடிவெடுக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வாழ்த்துக்கள்:
அண்மையில் புதிதாக உதித்த மலேசியா காயல் நல மன்றத்தினை மனமகிழ்வுடன் வரவேற்று அவர்களின் முயற்சிகள் யாவும் நமது காயல் மாநகர மக்களுக்கு பெரும் உதவியாக அமைய வல்லோனை துஆ செய்து எமது மன்றத்தின் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்கிறோம்.
மேலும் பெங்களூர் காயல் நலமன்றம் மற்றும் மர்ஹூம் ஆடிட்டர் புஹாரி ஹாஜியார் அவர்களின் குடும்பத்தார் ஆகியோர்களின் முயற்சியின் பலனாக நமது காயல் மக்கள் பயன்பெறும் முகமாக பெங்களூரில் மாணவர் தங்கும் விடுதி கட்டிகொடுத்ததை எமது மன்றம் மகிழ்வுடன் வாழ்த்துவதுடன் மென்மேலும் நலத்திட்டங்கள் பல செய்திட துஆ செய்கின்றோம்.
இரங்கல் செய்தி:
மஹ்ழரா அரபிக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும், காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் முன்னாள் இமாமுமான, குத்துக்கல் தெருவைச் சார்ந்த மவ்லவீ ஊண்டி எம்.எம்.செய்யித் முஹம்மத் பாக்கவீ ஸூஃபீ ஃகலீஃபத்துல் காதிரீ அவர்கள்,
ஜனவரி 10ஆம் நாள் மற்றும் எமது மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களான ஜனாப் இஸ்மாயில் மற்றும் ஹுபைப் ஆகியோர்களின் பெரியப்பா வீட்டு சகோதரரான - சதுக்கைத் தெருவைச் சேர்ந்த ‘முத்துக்கெட்டி’ எஸ்.ஏ.கே.முஹம்மத் முகைதீன் என்ற ‘அல்யவ்ம் டெக்கரேஷன் மம்மி‘ அவர்கள் ஜனவரி 13 அன்று மரணமடைந்த செய்தியறிந்து மிகவும் கவலையடைந்தோம். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அவர்கள் செய்த அற்புதமான அனைத்து பணிகளையும் அல்லாஹ் கபூல் செய்து அவர்களுக்கு நன்மைகளாக மாற்றி கொடுப்பானாக. அவர்களை பிரிந்து தவிர்க்கும் அவர்களின் குடும்பத்தார்கள் யாவருக்கும் அல்லாஹ் சபூர் எனும் மேலான பொறுமையை கொடுப்பானாக. அவர்களின் மறு உலக வாழ்க்கையை வெற்றியாக்கி வைப்பானாக என பிரார்த்தித்து எங்கள் சங்கத்தின் அங்கத்தினர் அனைவரும் அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் சலாம் எனும் சாந்தியை சமர்பிக்கின்றோம்.
அடுத்த செயற்குழு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் 14 – 02 - 2014 ஆம் தேதி வெள்ளியன்று அஸர் தொழுகைக்கு பின் நடைபெறும் என்று மன்றத்தின் தலைவர் ஹாபிஃழ் M.A ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் மஹ்ழரி அவர்கள் அறிவித்தார்.
மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் நஹ்வி S.A. இஸ்ஹாக் லெப்பை ஆலிம் மஹ்ழரி அவர்களின் துஆ மற்றும் கப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு, அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில், அதன் செய்தித் துறை பொறுப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபூதபீ காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |