காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரியில் கலை இலக்கியப்போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இது குறித்து அக்கல்லூரி சார்பாக
வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
காயல்பட்டினம் சொளுக்கார் தெருவில் அமைந்துள்ள சமுதாயக் கல்லூரியில் கலை இலக்கியப் போட்டிகளான தமிழ் மற்றும் ஆங்கில
கட்டுரைப்போட்டி, ஒவியம், வினாடி வினா (எழுத்துத் தேர்வு) ஆகியன சிறப்பாக நடைபெற்றன.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக முகைதீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் திரு டி. ஸ்டீபன் M.Sc., B.Ed. அவர்கள் வருகை தந்து போட்டிகளை துவக்கி வைத்தார்.
வட்டார அளவில் நடத்தப்பட்ட போட்டியில் 24 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உட்பட 360 மாணவ - மாணவியர் இப்போட்டிகளில் கலந்து தங்களது
திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
இப்போட்டிகளை முகைதீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி துணை செயலாளர் ஜனாப் கே.எம்.டி. சுலைமான் லெப்பை B.Com., எல்.கே. மேல்நிலைப்பள்ளி ஆட்சிக்குழு உறுப்பினர் ஜனாப் எல்.டி. இப்ராஹிம், காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரியின் ஆலோசகர் ஜனாப் எஸ்.எம்.பி. முஹம்மத் அபூபக்கர் M.Com, M.Phil., DCA, உதவி பேராசிரியைகள் ஜனாபா ஏ. ரவூப் நிஷா M.B.A., M.Ed., NET, எம். ஆஷா தௌலத் B.A., DCA, ஏ. ரிசா ஹாதூன் DFD, அலுவலக உதவியாளர்கள் ஜே.நர்கீஸ் பானு மற்றும் என்.எஸ்.எஸ். மாணவிகள் போட்டிகளை நடத்தி வைத்தனர்.
கல்லூரி முதல்வர் ஜனாப் எம்.ஏ. புஹாரி M.Com., M.Phil., M.Ed. போட்டிகளுக்கான விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
போட்டிகளில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்களும், முதல் இரண்டு இடங்களில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் அல்லது
மாணவியருக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும், இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள கல்லூரி ஆண்டு விழா மற்றும்
பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எம்.ஏ. புஹாரி M.Com., M.Phil., M.Ed.
சமுதாயக் கல்லூரி முதல்வர்.
|