தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா, மாவடட பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை ஆகியோர் அதிமுக சார்பில் ராஜ்யசபா வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
காலியான 6 ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கான தேர்தல் வரும் பிப்.7 ம் தேதி நடக்கிறது. இதில் தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 5 பேர் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் ஆகும் வாய்ப்பு இருக்கிறது. இதில் அ.தி.மு.க, 4 இடங்களிலும், ஒன்றை கூட்டணி கட்சியான மார்க்., கம்யூ., கட்சிக்கும் வழங்க முடிவு செய்யப்ட்டுள்ளது.
இதன்படி அ.தி.மு.க, பொதுச்செயலர் ஜெயலலிதா வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். இதில், முத்துக்கருப்பன் (நெல்லை மாநகர் அ.தி.மு,க., செயலர்), விஜிலா சந்தியானந்த் (நெல்லை மேயர், மற்றும் மாநகர் மகளிர் அணி செயலர்), சசிகலா புஷ்பா (தூத்துக்குடி மேயர், மகளிர் அணி செயலர்), சின்னத்துரை (அ.தி.மு.க,. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை)ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்க்பபட்டுள்ளனர்.
தகவல்:
www.tutyonline.net
|