Re:... posted byசாளை பஷீர் (ஜோன்ஸ் தெரு , மண்ணடி , சென்னை)[25 January 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 32695
அன்பு நண்பர்கள் ஸாலிஹ் , ஷூஅய்ப் காக்கா , செய்யத் இஸ்மாயீல் ஆகியோரின் வினாக்களுக்கு விளக்கமளிக்க விரும்புகின்றேன்.
ஹூக்ளி நதியின் தூய்மைப்படுத்தப்பட்ட நீர் குடிப்பதற்கும்
தூய்மைப்படுத்தப்படாத நீர் குளியல் ,துவைத்தலுக்குமாக அரசால் தனித்தனியாக வினியோகிக்கப்படுகின்றது.
ஞெகிலியின் பயன்பாடு நகரில் இருக்கத்தான் செய்கின்றது. குல்லட் எனப்படும் தேநீர் மண் குவளைக்கு மாற்றாக ஞெகிலி குளைகளை காய்கறி சந்தையில் கண்டேன், வருத்தமாக இருந்தது.
விக்டோரியா அரண்மனைக்கு செல்வதை நான் வேண்டுமென்றேதான் தவிர்த்தேன்,.
காரணம் பிரபலமானவற்றை மீண்டும் மீண்டும் பார்த்து வர்ணிப்பதை விட அன்றாட வாழ்வின் கவனிக்கப்படாத மிக எளிய கூறுகளுக்குள் ஒளிந்திருக்கும் வாழ்க்கையின் துணுக்குகளை படைப்புகளின் வாயிலாக மீள உருவாக்குவதே என் நோக்கம்.
விக்டோரியா அரண்மனையை நான் எனது முதல் பயணத்தின்போதே கண்டுகளித்து விட்டேன்.
ஹவ்ரா என்று ஆங்கிலத்தில் எழுதினாலும் வங்காள மொழியில் ஹவ்டா என்றுதான் அழைக்கின்றார்கள்.
அதே போல அலீகர் என ஆங்கிலத்தில் எழுதினாலும் அலீகட் என்றுதான் ஹிந்தியிலும் உர்தூவிலும் அழைக்கின்றார்கள். இது போல நிறைய எடுத்துக்காட்டுகள் உண்டு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross