பயனுள்ள சேவை...! posted byM.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.)[25 January 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32702
பயனுள்ள சேவை! நாம் உடுத்து உருப்படியாக இருக்கும் போது அது தேவைக்கு அதிகமாக அலமாறியில் அடுக்கி வைப்பதை விட இல்லாத ஏழை எளியோர்க்கு உடுத்து மகிழ உதவும் இந்த எண்ணம் பாராட்டுக்குரியதே!
வெறும் ஆடைகள் மட்டுமல்லாது நாம் தேவைக்காக வாங்கி வைத்திருக்கும் மருந்து மாத்திரைகள் சில வேளை நாம் வேறு மருத்துவரை நாடும் போதோ, அல்லது மருத்துவரே மாத்திரை மருந்துகளை மாற்றி எழுதித் தரும் போதோ அவைகள் வாங்கிய கடைகளில் திரும்பப் பெற மறுத்துவிடுவர். இந்நிலையில் இது போன்ற மருந்துகளை அதன் காலாவதி ஆகுவதற்கு முன் இது போன்ற அமைப்புகளிடம் தகுந்த தகவலோடு ஒப்படைத்தால், மருந்தாளுமை அறிந்த நபர் ஒருவர் உதவியோடு அவைகளை பிரித்து ஒழுங்கு படுத்தி வசதி குறைவானவர்களுக்கு இலவசமாக வழங்கலாமே?
இது போன்ற சேவை சில ஊர்களில் பள்ளிவாசல் ஜமாத் சார்பில் நடந்து வருவதாக அறிந்தேன். அளவுக்கு அதிகமான எத்தனையோ மருந்துகள் விலை கொடுத்து வாங்கி பயனின்றி மாதக்கணக்கில் நம் வீட்டு அலமாறியில் உறங்கிக்கொண்டிருந்து ஒரு குறிப்பிட்ட காலம் வந்ததும் குப்பைக்குச் செல்வதை விட வசதி குறைவான நோயாளிகளுக்கு உதவட்டுமே...? நல மன்றங்களே! யோசனைக்கு எடுப்பீர்களா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross