அனைத்தையும் இயல்பாக எடுத்துக்கொள்பவர்... posted byS.K.Salih (Kayalpatnam)[27 January 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32758
இஸ்மாஈல் மாமா அவர்கள், தம் வாழ்நாளில் உடல் நலன் சார்ந்தும், உறவுகள் சார்ந்தும் எத்தனையோ சோதனைகளைச் சந்தித்துள்ளதை நானறிவேன். இருந்தும், அவர்கள் வாய் திறந்து சொற்களை உதிர்த்தால்தான் அவை நமக்கு வெளியில் தெரியுமே தவிர, எளிதில் அதைக் கண்டறிய இயலாது. காரணம், வாய் நிறைய பிற கதைகளைப் பேசத் தெரிந்தவர்களுக்கு தன் சொந்தக் கதை, சோகக் கதைகளை அடுத்தவர்களிடம் பகிரும் எண்ணமே இருக்காது.
அத்தனையையும் மனதில் தேக்கி வைத்திருந்தும், எதுவுமே நடவாதது போல் இயல்பாக தன் பணிகளைக் கவனிப்பார்கள்.
தன் இறுதிக் காலத்தில் உடல் நலக் குறைவால் பெரிதும் அவதியுற்றார்கள். ஆனால் அல்லாஹ் அவர்களுக்களித்த தன்னம்பிக்கை காரணமாக, தன்னால் இயன்ற வரை, தன் சகோதரர் ஸாலிஹ் மாமாவுடன் இணைந்து தான் கவனித்து வந்த ‘கானாப்பா மரக்கடை’யில் பணிகளைத் தொடர்ந்து கவனித்து வந்தார்கள்.
அவர்களின் குணத்திற்கேற்ற நல்ல மனைவி - எங்கள் மைமூன் மச்சி அவர்கள். இவ்விருவருமே யாருக்கும் எந்தத் தீவினையும் நினைக்காதவர்கள் என்பதை விட அது பற்றித் தெரியாதவர்கள் என்றே கூறலாம். வெள்ளந்தியான மனதுக்குச் சொந்தக்காரர்கள்.
கருணையுள்ள அல்லாஹ், அவர்கள் அறிந்தோ - அறியாமலோ செய்த பாவப்பிழைகளைப் பொருத்தருளி, அவர்களின் மண்ணறை - மறுமை வாழ்வுகளை சிறந்தோங்கச் செய்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தைத் தந்தருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக...
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
உங்கள் துயரத்தில் பங்கேற்றவர்களாக,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தினர்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross