ஒரே குட்டையில் ஊறி நாற்றெமெடுத்த மட்டைகள்! posted bySaalai Abdul Razzaq Lukman (Singapore)[27 January 2014] IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 32806
அம்மாவும், ஐயாவும் 'ஒரே குட்டையில் ஊறி நாற்றெமெடுத்த மட்டைகள்தான்'. இந்த ஈழ புலியும்(?) விதிவிலக்கல்ல.
தமிழகத்தில், 1998 நாடாளுமன்ற தேர்தல் வரை, அட்ரஸ் இல்லாமல் இருந்த பா.ஜ.க.-வை தமிழகத்தில் 4 சீட் ஜெயிக்க வைத்த பெருமை புரட்சி தலைவிக்கு உண்டு. பின்னர் தி.மு.க. ஆட்சியை கலைக்கவில்லை என்ற காரணத்தால் மத்திய ஆட்சியை கவிழ்த்தார்.
மீண்டும் 2004 நாடாளுமன்ற தேர்தலில், அந்த கட்சியுடன் கூட்டணி வைத்து 7 சீட் கொடுத்தார். அனைத்திலும் அந்த கட்சி தோல்வி கண்டது வேறு விஷயம்.
ஆனால், அம்மாவுக்கு கொள்கை ரீதியாக உடன்பாடான கட்சி, பா.ஜ.க தான். இந்த தேர்தலிலும், ஒரு வேளை பா.ஜ.க ஆட்சி அமைக்க அ.தி.மு.க ஆதரவு தேவைப்பட்டால், எந்த சலனமும் இல்லாமல் ஆதரவு கொடுப்பார்.
அதற்கு எள்ளளவும் குறைந்தவர் இல்லை, நமது 'மஞ்சள் துண்டு' கலைஞர். அம்மா ஆதரவு வாபஸ் வாங்கி விட்டார் என்றதும், 'தன் மனசாட்சி' மருமகன் மாறனுக்காக, ஓடோடி ஆதரவு தெரிவித்ததும் இவர்தான்.
1999 பாராளுமன்ற தேர்தலிலும், 2001 சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி வைத்து, சட்டமன்றத்தில் பா.ஜ.க. தன் கணக்கை துவக்க வைத்தவரும் இவர்தான். மருமகன் மறைவிற்கு பின், 'ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும்' என்று விலகியவர்.
இந்த தேர்தலில் புரட்சி(?) புயல், ஈழ புலி, வைகோ, பா.ஜ.க- உடன் கூட்டணி சேர்ந்தது ஒன்றும் வியப்பில்லை. தி.மு.க. & அ.தி.மு.க ஆகியவை அவரை அழைக்காத காரணத்தினால், அங்கு சேர்ந்துள்ளார். இந்த தேர்தலில் அவரே ஜெயிக்கப் போவதில்லை. அதனால் நாம் கவலை பட வேண்டியதில்லை.
அதனால் நம் சமுதாயத்துக்கு ஒருவரும் விசுவாசம் இல்லை.
இப்படி இருக்கும் சூழலில், நம் சமூதாய கட்சிகளில், இரு பெரும் கட்சிகளான, முஸ்லிம் லீக் மற்றும் ம.ம.க. ஆகியவை, தி.மு.க கூட்டணியில் இடம் பெரும் என்று அறிவித்துள்ளனர். இன்னொரு பெரிய அமைப்பான (கட்சி அல்ல) த.த.ஜ (TNTJ) யாருக்கு ஆதரவு தெரிவிக்கும்? என்பது தான் இப்போதைய கேள்விக்குறி.
த.மு.மு.க விலிருந்து பிரிந்த பின்னர், இது நாள் வரை, TNTJ அமைப்பினர், த.மு.மு.க / ம.ம.க. எந்த அணியில் இருக்கிறதோ அதற்கு மாற்று அணியில் தான் இருப்போம் என்று கொள்கையாகவே வைத்துள்ளனர்.
ஆனால், நமது சமுதாயத்தின் பலத்தை காட்ட வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். தங்களது வீராப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, சமுதாயத்திற்காக ஒரே அணியில் திரண்டு நமது பலத்தை காட்டுவோம்.
இப்போது இருக்கும் அணிகளில், பா.ஜ.க வை வீழ்த்தக்கூடிய கூட்டணியாகிய தி.மு.க அணியில் நம் சமுதாய கட்சிகள் / இயக்கங்கள் ஒன்று சேர்ந்து, நமது Bargaing power -ஐ அதிகரித்து, நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை பெற முயற்சிப்போம். எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு உதவி செய்வானாக ஆமீன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross