செய்தி: ஜித்தா கா.ந.மன்றத்தின் “புற்றுக்கு வைப்போம் முற்று” குறுந்தகடு வெளியீட்டு விழா! மருத்துவ கேள்வி-பதில் நிகழ்ச்சி!! திரளானோர் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அல்ஹம்துலில்லாஹ். posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[14 March 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3283
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இந்நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
திரளான மக்கள் கலந்துக் கொண்டனர் அதிலும் பெண்கள் மிகவும் அதிகமாக கலந்து கொண்டது மகிழ்ச்சிக்குரியது.
இந்நிகழ்ச்சியிலே பேசியவர்கள் அனைவர்களுமே மிக சிறப்பாக பேசினார்கள். சகோதரி எஸ்.ஒ.பி. ஆய்ஷா அவர்கள் ஒரு புற்று நோயாளியைப் பற்றி, நேரிடையாக பார்த்து அறிந்ததை விளக்கியது எல்லோர் மனதையும் நெகிழச்செய்தது.
------------------------------------
புற்று நோய் குறித்து மக்கள் கேட்டக் கேள்விகளுக்கு டாக்டர்களும், சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்புக்குழு ஆலோசகர் திரு. நித்யானந்த் ஜெயராமன் போன்றோரும் மிகவும், விளக்கமான பதில்களை தந்தது மக்களுக்கு மகிழ்ச்சியளித்தது.
அதிலும் பெண்கள் சம்பந்தமான புற்று நோய் கேள்விகளுக்கு டாக்டர் ஜுலைஹா அவர்கள் கொடுத்த சிகிச்சையின் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
------------------------------------
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஜித்தா கா.ந.மன்றத்திற்கும் அதை நல்ல முறையிலே நடத்திட அல்லும் பகலும் அயராது உழைத்து, பாடுபட்டு மிகவும் சிறப்பாக நடத்தி, மக்களுக்கு ஒரு சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய அனைத்து சகோதரர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஈருலகிலும் கிருபை செய்வானாக ஆமீன்.
-------------------------------------
சகோதரிகளே!
இந்த நிகழ்ச்சிக்கு பெண்கள் அதிகமானவர்கள் வந்து கலந்து கொண்டீர்கள் சந்தோசம். எனக்கு தெரிந்தவர்கள் பலரிடமும் கேட்டபோது எல்லோருமே இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகவே சொன்னார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
இந்த மாதிரியான உடல்நலம், சுற்றுச்சூழல், கல்வியறிவு பற்றிய நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் தயவு செய்து உங்கள் வேலைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, உங்கள் பொன்னான நேரத்தை இதற்கு செலவழித்தால் உங்கள் வாழ்நாளெல்லாம் வைரம் போல் வாழலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross