Re:...ஆசிரியர்களும் மாணவர்களாய் இருந்தவர்களே posted bymackie noohuthambi (kayalpatnam)[30 January 2014] IP: 59.*.*.* India | Comment Reference Number: 32864
ஒரு தாய் இன்னொரு தாயின் மகளே, ஒரு மாமியின் மருமகளே...இதை பெரும்பான்மையான தாய்மார்கள் நினைப்பதில்லை வீட்டுக்கு வந்த மருமகளை ஆட்டிப் படைப்பார்கள். அபாடிதான் ஆசிரியர்கள் பலரும் நினைக்கிறார்கள்.
நூற்றுக்கு நூறு என்று ஒரு சினிமா. நான் பள்ளிக்கூடத்தில் படித்தபோது பார்த்தது. ஆசிரியரும் மாணவர்களும் சேர்ந்து பிக்னிக் போவார்கள். "உங்களில் ஒருவன் நான், இரு கண்களில் பேதம் ஏன், நானும் மாணவன்தான்" என்று மாணவர்களுடன் ஆடிப் பாடி மகிழ்வார். இப்படி ஒரு நெருக்கம் நிஜ வாழ்க்கையில் இருந்தால் ஆசிரியர் மாணவர் உறவு வலுப் பெரும்.
அது எட்டாம் வகுப்பறை.
திருக்குறள் பாடம் நடக்கிறது. ஆசிரியர் சொல்கிறார், "தோன்றின் புகழோடு தோன்றுக, அக்திலார் தோன்றலிற் தோன்றாமை நன்று". மாணவன் எழுந்தான், அதெப்படி சார் தோன்றும்போதே புகழோடு தோன்றுவது? மனிதன் பிறந்து வளர்ந்து வாலிபனாகி சேவைகள் செய்யும்போதுதானே அவனுக்கு புகழ் வரும்?. ஆசிரியருக்கு கோபம். உட்கார்டா பேசாமே...என்றார்.
வீட்டுக்கு போனார். மனம் நிலைகொள்ளவில்லை. இப்படி ஒரு சின்ன பைய்யன் கேட்டு விட்டானே, நமக்கு பதில் சொல்ல முடியாமல் போய்விட்டதே. நூல்களை புரட்டினார், விரிவுரைகளை பார்த்தார் விடை கிடைத்தது அடுத்த நாள் வந்தார். அடே நேற்று கேள்வி கேட்ட அந்த பையன் யார்? நான்தான் சார். இதோ பதில்.
வாழ்ந்தால் புகழோடு வாழ், இல்லாவிட்டால் அப்படி ஒரு வெறும் வாழ்வு வாழ்வதை விட வாழாமல் இருப்பதே மேல். மாணவன் திருப்தி அடைந்தான். அந்த மாணவன்தான் பிற்காலத்தில் குறளோவியம் எழுதிய கலைஞர் கருணாநிதி அவர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross