Re:... posted bySalih (Chennai)[31 January 2014] IP: 122.*.*.* India | Comment Reference Number: 32887
சகோதரர்கள் மௌலவி முஹம்மத் ஜுபைர் பிர்தௌசி மற்றும் இர்ஷாத் சேட் ஆகியோருக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,
இச்செய்தி அமாவாசை அன்று தேயும் பிறையையோ, அல்லது வளரும் பிறையையோ, உலகில் எந்த பகுதியிலாவது, காண முடியுமா என்ற கேள்வி குறித்தது மட்டுமே! எனவே, இந்தக் குறுகிய வரம்பிற்குள் மட்டும் எனது கருத்தைத் தருகிறேன்.
அமாவாசை என்று கூறப்படும் நாளில் - அது நிகழும் நேரத்தைப் பொருத்து, உலகில் எந்த பகுதியிலாவது, சூரிய உதயத்திற்கு முன்னர் கிழக்கில் தேயும் பிறையையோ, அல்லது சூரியன் மறைந்த பின்னர் மேற்கில் வளரும் பிறையையோ காணலாம். இது விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. அவ்வாறு தெரியாமல் இருக்க விஞ்ஞான அடிப்படையிலான ஒரு காரணமும் இல்லை.
(தேயும்/வளரும்) பிறை ஓரிடத்தில் தெரியுமா என்பதில் - பூமியிலிருந்து பார்க்கும்போது சந்திரன், சூரியனை விட்டு எவ்வளவு தூரம் விலகியுள்ளது (ELONGATION) என்பதே முக்கியம். DANJON LIMIT எனப்படும் சுமார் 7 டிகிரி அளவுக்கு மேல் - ELONGATION இருந்தால், தேயும் பிறையையோ, வளரும் பிறையையோ - தொலைநோக்கிகள் / வெறுங்கண்கள் கொண்டு காணலாம். இது காலங்காலமாகப் பார்க்கப்பட்டு, ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.
DANJON LIMIT குறித்த NASA நிறுவன ஆய்வாளர்களின் கட்டுரை:
http://adsabs.harvard.edu/full/1998Obs...118...65F
அமாவாசை தினங்கள் உட்பட பல்வேறு தினங்களில் தேயும் பிறை காணப்பட்ட தகவல் பக்கம்:
http://vjac.free.fr/skyshows/moon/waningcrescent.html
அமாவாசை தினங்கள் உட்பட பல்வேறு தினங்களில் வளரும் பிறை காணப்பட்ட தகவல் பக்கம்:
http://vjac.free.fr/skyshows/moon/waxingcrescent.html
பிப்ரவரி 03, 2011 அமாவாசை அன்று பிறை காணப்பட்ட செய்தி:
http://www.astropix.com/HTML/Planetary/Young_Moon_20110203.HTM
ஜனவரி 01, 2014 அமாவாசை அன்று அமெரிக்காவில் பிறை காணப்பட்ட செய்தி:
http://www.universetoday.com/107700/ultra-thin-young-crescent-moon-sighted-from-u-s-southwest/
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross