காயல்பட்டினம் இணையதளத்தின் இந்த விமர்சனத்தின் உண்மை நிலையை தயவுகூர்ந்து உன்னிப்பாக அறிந்துகொள்ள வேண்டுகிறோம்.
1. அமாவாசை என்று மக்கள் புரிந்துள்ள மேற்படி புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ பொதுவாக அனைத்து உலகநாடுகளிலும் ஒவ்வொருமாதமும் புறக்கண்களுக்குத் தெரிகிறதா என்று கேட்கிறோம்.
2. மேற்படி புவிமைய சங்கமம் நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கு என்று சொல்லும் அப்பகுதியிலோ, அமெரிக்காவிற்கு மேற்கு என்ற அந்தப் பகுதியிலோ ஒவ்வொரு மாதமும் தெரிகிறதா?
3. புவிமைய சங்கமம் நாளில் சரி ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கு என்று சொல்லும் அப்பகுதியில் அரிதாக சில மாதங்களில் மட்டும் தெரியும் வாய்ப்பு உள்ளது என்று கூறும் அப்பிறையை முஸ்லிம்கள் புறக்கண்களால் பார்த்ததாக சாட்சிகள் உள்ளதா? அந்த அரிதான மாதங்களில், அவ்வாறு அரிதாக தென்படுவதாகக் கூறும் அப்பிறை சாதாரணமாக புறக்கண்களால் பார்க்கப்படுகிறதா அல்லது (Telescope, Charge-Coupled Devices (CCDs) image) தொலைநோக்கி கொண்டு புகைப்படம் எடுக்கப்படுகின்றதா?
4. அரிதான ஒரு சம்பவத்தை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தும் அதன் அடிப்படையில்தான் அமல் செய்ய வேண்டும் என்று பொதுவான மார்க்க சட்டம் வகுப்பதற்கு மார்க்க ஆதாரம் என்ன?
5. ஃபஇன் கும்ம அலைக்கும், அதாவது மாதத்தில் இறுதிநாளில் சந்திரனின் ஒளி பூமிக்கு காட்சி தராமல் நிச்சயமாக மறைக்கப்படுமே அந்நாளில் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை வைத்து, முஸ்லிம்கள் முன்னோக்கும் கிப்லாவான கஃபாவிலோ அல்லது சவுதிஅரேபிய தீபகர்ப்பத்திலோ கடந்த 1400 வருடங்களில் புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ புறக்கண்களுக்குத் தெரிந்துள்ளதா? அவ்வாறு தெரிந்துள்ளதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியுமா?
6. அல்லது இனிவரும் காலங்களிலாவது முஸ்லிம்கள் முன்னோக்கும் கிப்லாவான கஃபாவிலோ, சவுதிஅரேபிய தீபகர்ப்பத்திலோ இவர்கள் வாதம்புரியும் அந்தப் புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ தெரியும் வாய்ப்புள்ளதா?
மேற்படி கேள்விகளை மாற்றுக் கருத்துடையோரிடம் கேட்டுகேட்டுப் சளித்து விட்டது. மேற்படி கேள்விகளுக்கு இல்லை இல்லை என்பதே அவர்களின் பதிலாகவும் உள்ளது. எனவே 'புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நாளில் பிறைபுறக்கண்களுக்குத் தெரியாது என்ற ஹிஜ்ரி கமிட்டியின் கூற்று பொய்யாகவில்லையா' என்ற தொனியில் காயல்பட்டினம் இணையதளம் இனியும் விமர்சனம் செய்தால் அவர்கள் ஹிஜ்ரி கமிட்டியினரை பொய்ப்படுத்திடவில்லை மாறாக அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களைத்தான் பொய்ப்படுத்திட முயல்கின்றனர் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டுகிறோம்.
காயல்பட்டடினம்.காம் அட்மின் அவர்களே, உங்களின் தவறான செய்திக்கு விளக்கமளித்து நேற்றே உங்களுக்கு மெயில் அனுப்பினேன். அதே மெயிலே சுருக்கி வாசகர்களும் படிக்கவேண்டும் என்பதற்காக இங்கு பதிவிடுகிறேன். ஹிஜ்ரி கமிட்டியினாராகிய எங்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு சத்தியத்தை விளங்கிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். டெலஸ்கோப் போட்டோ பிறைகளை வெளியிட்டு புறக்கண்களால் பார்க்கப்பட்டதாக பிரம்மையை ஏற்படுத்த வேண்டாம். மக்களைக் குழப்பவேண்டாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross